புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

பிக்பாஸ் வீட்டில் பொய் சொல்லும் நிலை வந்தது, பிரதீப் என்னை மன்னிச்சிடுங்க.. ஐஷுவின் உருக்கமான கடிதம்

BB7 Tamil Aishu: பிக் பாஸ் வீட்டை விட்டு எலிமினேட் ஆகி வெளியேறும் போட்டியாளர்கள் முதன் முதலில் போடும் பதிவுகள் ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும். அந்த வகையில் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே ஐஷு எதுவுமே பேசாமல் இருந்தது எல்லோருக்குமே சந்தேகமாக தான் இருந்தது. ஐஷுவுக்கு என்ன ஆச்சு, அவருடைய பெற்றோர்கள் அவரை எப்படி எதிர் கொண்டார்கள் என்ற என் கேள்வியும் இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று ஐஷு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான கடிதம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அந்த கடிதத்தை பார்க்கும் பொழுதே அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின் எந்த மாதிரியான விஷயங்களை எதிர்நோக்கி இருப்பார் என்று நன்றாகவே தெரிகிறது. அந்த கடிதத்தை படித்துவிட்டு நிறைய பேர் அவருக்கு ஆறுதலாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

ஐஷு அந்த கடிதத்தில் பிக் பாஸ் ரசிகர்கள் எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள். எல்லோருக்கும் நான் பெரிய ஏமாற்றத்தை கொடுத்து விட்டேன். என்னை போல் நிறைய பேர் இந்த வாய்ப்புக்காக ஏங்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால் இது போன்ற ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்தும் அதை தவற விட்டு விட்டேன். இந்த நிகழ்ச்சியில் என்னை பார்க்கும் பொழுது என் மீது இருந்த மரியாதை எனக்கு போய்விட்டது.

Also Read:இது என்ன பிக்பாஸ் ரெஸ்டாரண்டா? கெட் அவுட்.. அதிரடியாக வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்

பிக் பாஸ் மேடை எந்த அளவுக்கு வாழ்க்கையை மாற்றுமோ அதே அளவுக்கு விஷம தன்மை நிறைந்ததாகவும் இருக்கிறது. இந்த விளையாட்டில் உங்கள் சக போட்டியாளர்களை நீங்கள் எந்த அளவுக்கு நேசித்தாலும் அவர்களைப் பற்றி எதிர்மறையான கருத்துக்களை மட்டுமே சொல்ல வைக்கிறார்கள். இதனால் சில நேரங்களில் பொய் சொல்லும் நிலைக்கு கூட நான் தள்ளப்படுகிறோம்.

காதல், நட்பு, கோபம் என சிக்கிக் கொண்டு நான் கண்மூடித்தனமாக இருந்து விட்டேன். இது என் வாழ்க்கையில் கிடைத்த முதல் மேடை அதை நான் சரியாக பயன்படுத்தவில்லை. என்னை தவறான விஷயத்தில் இருந்து காப்பாற்ற நினைத்த பிரதீப், யுகேந்திரன், விச்சுமா, அர்ச்சனா, மணி அண்ணா என்னை மன்னிக்க வேண்டும். அதேபோன்று நிக்சனின் ரசிகர்களும் என்னை மன்னித்து விடுங்கள். நான் வெளியேறிய பின்பு அவர் தனக்கான விளையாட்டை சரியாக விளையாடு கிறார் என்று நீங்கள்
உணர்கிறீர்கள் .

இந்த நிகழ்ச்சி என்னை தற்கொலை செய்யும் அளவுக்கு தூண்டியது. என் பெற்றோர் என் மீது வைத்திருக்கும் கடைசி நம்பிக்கையில் தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அவர்கள் ரொம்ப கஷ்டப்பட்டு என்னை வளர்த்து இந்த இடத்திற்கு கொண்டு வந்து இருக்கிறார்கள். நான் செய்த தவறுக்கு என் மீது கற்களை வீசுங்கள், என் குடும்பத்தை விட்டுவிடுங்கள் என்றும் எழுதியிருக்கிறார்.

Also Read:பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்.. மாட்டிகிட்டியே பங்கு, நிக்சனை ரோஸ்ட் செய்த ஆண்டவர்

 

 

 

 

Trending News