ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

நெல்சனின் ராஜதந்திரத்தை தவிடு பொடியாக்கிய ஐஸ்வர்யா.. நிலைகுலைந்து போன ரஜினிகாந்த்

நெல்சனின் பீஸ்ட் படம் இணையத்தில் ட்ரோல் செய்யப்பட்டதை அடுத்து ஜெயிலர் படத்தை தரமாக கொடுக்க வேண்டும் என்று செயல்பட்டு வருகிறார். இதற்காக தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் மட்டுமின்றி கன்னடம், மலையாளம் மொழிகளில் பெரிய நடிகர்களாக இருக்கும் சிவராஜ்குமார், மோகன்லால் போன்ற நடிகர்களையும் வளைத்துள்ளார்.

அதுமட்டுமின்றி ரம்யா கிருஷ்ணன், தமன்னா, பிரியங்கா அருள் மோகன் போன்ற நட்சத்திரங்களையும் ஒன்றாக படத்தில் இறக்கி உள்ளார். மேலும் ஜெயிலர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தான் ரசிகர்களால் விமர்சனம் செய்யப்பட்ட நிலையில் படத்தில் ரிலீஸ் செய்தியை தாறுமாறாக இறக்க வேண்டும் என இரவு பகல் பார்க்காமல் நெல்சன் வேலை பார்த்துள்ளார்.

Also Read : விசுவாசத்தை காட்ட ரஜினியை அவமானப்படுத்திய ஆச்சி.. பெருந்தன்மையை காட்டி கூனி குறுக வைத்த சூப்பர் ஸ்டார்

அதன்படி சமீபத்தில் ஜெயிலர் ரிலீஸ் தேதி வீடியோவை வெளியிட்டு இருந்தார். அதில் ரஜினி செம லுக்கில் மாசாக காரில் இருந்து இறங்கி வந்தார். மேலும் கடந்த இரண்டு நாட்களாக ஜெயிலர் பற்றியும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பற்றியும் தான் இணையத்தில் ரசிகர்கள் பெரிய அளவில் பேசி கொண்டு இருந்தனர்.

இதை வைத்து ஜெயிலர் படத்தை மிகப்பெரிய வெற்றி படமாக மாற்றி விட வேண்டும் என நெல்சன் நினைத்துக் கொண்டிருந்த நிலையில் பெரிய இடியை இறக்கி உள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அதாவது இப்போது ஐஸ்வர்யா லால் சலாம் என்ற படத்தை எடுத்து வருகிறார். இதில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

Also Read : பண்ணுனதெல்லாம் போதும், ஒரேடியாக ஆப் செய்த ரஜினி.. விஜய்யிட்ட செஞ்ச மாதிரி நெல்சனின் பருப்பு வேகல!

லால் சலாம் படத்திற்காக ரஜினி மும்பை சென்று இருந்தார். இந்நிலையில் திடீரென இந்த படத்தின் போஸ்டரை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்டு இருக்கிறார். ரஜினியை அசிங்கப்படுத்தும் அளவுக்கு அந்த போஸ்டர் இடம்பெற்றுள்ளது. ஜெயிலர் படத்தில் கெத்தாக இருந்த ரஜினியின் இமேஜை அப்படியே கெடுத்துள்ளது லால் சலாம். இந்தப் படத்தை ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

இதனால் ஜெயிலர் படத்தைப் பற்றிய பேச்சு அப்படியே நின்னு போனது. நெல்சன் தனது ராஜதந்திரத்தை பயன்படுத்தி படத்தை பெரிய அளவில் வெற்றி செய்து விடலாம் என்று நினைத்த நிலையில் ஐஸ்வர்யா எல்லாவற்றையும் தவிடு பொடி ஆக்கி உள்ளார். ஏற்கனவே ரஜினி தனது இளைய மகளை நம்பி கோச்சடையான் படத்தில் நடித்து மோசம் போன நிலையில் அதே வேலையை ஐஸ்வர்யாவும் செய்துள்ளார். ஆகையால் ரஜினி என்ன செய்வது என்று தெரியாமல் நிலைகுலைந்து போய் உள்ளார்.

Also Read : ரிலீஸ் தேதியை லாக் செய்த நெல்சன்.. மீண்டும் இளமையுடன் வந்த ஜெயிலர் ரஜினியின் வீடியோ

Trending News