வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

எவ்வளவு பட்டாலும் திருந்தாத ஐஸ்வர்யா.. பேராசையால் இழந்து தவிக்கும் கண்ணன்

விஜய் டிவியில் வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் தற்போது 1200 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது. ஐஸ்வர்யா கண்ணன் என்னதான் நாங்க தனியாக வாழ்ந்து காட்டறோம் என்று சொல்லிட்டு போனாலும் தற்போது ஆடம்பரத்தால் பணமில்லாமல் தவித்து வருகிறார். இவர்களுக்கு தற்போது எல்லா விதத்திலும் பணம் கொடுத்து உதவி செய்வது கதிர். அதுவும் இவருடைய அண்ணன் மூர்த்திக்கு தெரியாமல் செய்து வருகிறார்.

இந்த விஷயம் முல்லை மூலமாக தனத்துக்கு தெரிகிறது. பிறகு தனம் ஐஸ்வர்யா வீட்டிற்கு வந்து கண்ணனிடம் நீ வாங்குற சம்பளத்தை வைத்து குடும்பத்தை நடத்த பழகிக்கோ இப்படி கதிரிடம் இனி பணம் வாங்கக்கூடாது என்று சொல்லிவிட்டு போறார். அடுத்ததாக தனம், முல்லையிடம் செலவுக்கு இந்த பணத்தை வச்சுக்கோ இருக்கிற பணமெல்லாம் கதிர் கண்ணனுக்கு கொடுத்து விட்டால் உங்க செலவுக்கு என்ன செய்வீங்க அதனால் இதை வாங்கிக்கோ என்று பணத்தை கொடுக்கிறார்.

Also read: கொக்கி குமாரிடம் மாட்டிக் கொண்ட இனியா.. ஆக்ஷன் கிங் ஆக மாறிய விக்ரம்

இதை மூர்த்தி பார்த்து விடுகிறார். பிறகு மூர்த்தி, நாங்கள் தனியா போயி இருந்து சமாளிப்போம் என்று சொல்லிட்டு தான போனாங்க இப்ப ஏன் பணத்தை கதிர் கிட்ட கேட்டுகிட்டு இருக்கான் என்று கோபப்படுகிறார். அடுத்ததாக மூர்த்தி கண்ணனை பார்த்து பேசுவதற்காக காத்துக்கொண்டிருக்கிறார். அப்பொழுது அந்த வழியாக போன கண்ணனை கோபமாக டேய் இங்க வா என்று கூப்பிடுகிறார். இவர் கூப்பிடுவதை பார்த்தால் என்னமோ கண்ணனை பலார் என்று அடிப்பார் எதிர்பார்த்து இருந்தால் அங்கே நடந்ததே வேற.

கண்ணனை பார்த்ததும் மூர்த்தி மனம் மாறிவிட்டது. இவர் என்ன பண்ண போறாரு அப்படின்னு யோசித்த நிலையில் கண்ணனிடம் செலவுக்கு இந்த பணத்தை வைத்துக்கொள் என்று கொடுத்து அத்துடன் இனி பணம் வேணும் என்றால் என்னிடம் வந்து கேளு கதிரிடம் போய் கேட்டு அவனை கஷ்டப்படுத்தக் கூடாது என்று சொல்கிறார். இதையும் மானங்கெட்ட போய் இருக்கிற கண்ணன் வாங்கிட்டு தான் வருகிறான்.

Also read: பக்காவாக காய் நகர்த்தும் ஜனனி.. மாட்டிக்கொண்டு முழிக்க போகும் குணசேகரன்

இந்த பணத்தை அப்படியே எடுத்து ஐஸ்வர்யா இடம் கொடுக்கிறார். ஐஸ்வர்யாவுக்கு தேவை பணம் மட்டும்தான் அது யார் கொடுத்தா என்ன மொத்தத்துல அவருக்கு பணம் கிடைக்குது அதை வைத்து இனிமேல் நினைத்ததெல்லாம் வாங்கலாம் என்று இன்னும் ஆடம்பர செலவு தான் பண்ணப் போகிறார். இவர்கள் கெட்டது போதாது என்று தற்போது மாத்தி மாத்தி அண்ணன் தம்பிகள் பணத்தை கொடுத்து இன்னும் கெடுத்து விடுகிறார்கள்.

இனிமேல் என்ன கண்ணன் ஐஸ்வர்யா திருந்தவா போறாங்க. அவங்க இஷ்டப்படி இன்னும் அதிகமாகவே ஆடம்பர செலவு செய்து ஊதாரி தனமாக சுற்ற போகிறார்கள். இதற்கு மொத்த குடும்பமும் வேற சப்போர்ட்டாக இருக்கிறது. கண்ணன் ஐஸ்வர்யா எல்லாம் எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்டாங்க. கடைசியில் பேராசையால் அனைத்தையும் இழந்து தவிக்கப் போகிறார்கள்.

Also read: கோபிக்கு இந்த அவமானம் தேவையா?. பாக்யாவிற்காக மகன்கள் கொடுத்த அடி

Trending News