வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

கை கொடுத்தது குத்தமா? அலட்சியப்படுத்திய ஐஸ்வர்யா லட்சுமி.. ஓவர் தலைக்கனத்துடன் திரியும் பூங்குழலி

Aiswarya Lakshmi: மலையாள நடிகையாக தமிழ் சினிமாவிற்கு விஷால் நடிப்பில் வெளிவந்த ஆக்சன் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் ஐஸ்வர்யா லட்சுமி. அடுத்து தனுசுடன் ஜகமே தந்திரம் என்ற படத்தில் நடித்து தமிழில் பரிச்சைமானார். அதன் பிறகு தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வந்தவர் பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கேரக்டருக்கு பிறகு பிரபலமாகிவிட்டார்.

இதனை தொடர்ந்து விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடித்த கட்டா குஸ்தி படமும் வெற்றி கொடுத்தது. அடுத்ததாக மணிரத்தினம் இயக்கத்தில் கமல் நடித்து வரும் தக் லைஃப் படத்திலும் நடித்து வருகிறார். இப்படி பிஸியாக நடித்து வரும் ஐஸ்வர்யா லட்சுமி சமீபத்தில் சொன்ன விஷயங்கள் தான் சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதாவது 25 வயசு ஆனதும் எனக்கு கல்யாணம் ஆக வேண்டும் என்று ஆசை வந்தது.

அதனால் மேட்ரிமோனியில் பதிவு பண்ணி வைத்திருந்தோம். ஆனால் இப்பொழுது தொடர் விவாகரத்தை பார்க்கும் பொழுது கல்யாணத்தின் மீது இருந்த ஆசையை போய்விட்டது. அதனால் என் வாழ்க்கையில் எனக்கு இனி கல்யாணமே கிடையாது என்று உறுதிமொழி எடுத்திருப்பதாக கூறியிருக்கிறார். இந்த ஒரு விஷயம் தான் இவரைப் பற்றி ட்ரெண்டிங் ஆகிப் போய்க் கொண்டிருந்தது.

ஆனால் அதற்குள் இன்னொரு விஷயமும் சோசியல் மீடியாவில் பரவி வருகிறது. அதாவது ஐஸ்வர்ய லட்சுமி கேரளாவில் ஷாப்பிங் முடித்துவிட்டு காரில் ஏறும்போது ரசிகர் ஒருவர் இவரை பார்த்து பேச வந்திருக்கிறார். அப்பொழுது ஐஸ்வர்யா லட்சுமி இடம் கை கொடுத்திருக்கிறார். ஆனால் அவரை உதாசீனப்படுத்தும் விதமாக கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல் நோ என்று சொல்லிவிட்டு உடனே காரில் ஏறி இருக்கிறார்.

தற்போது இந்த வீடியோ வெளியாகி ஐஸ்வர்யா லட்சுமி சில வெற்றிகளை பார்த்ததும் ஓவர் தலைக்கணத்துடன் திரிய ஆரம்பித்து விட்டார். கை கொடுத்தது ஒரு குத்தமா ? நடிகை என்றால் ரசிகர்கள் இருக்க தான் செய்வார்கள். அப்படிப்பட்ட நடிகைகளை பார்க்கும் பொழுது சில ரசிகர்கள் கைகொடுக்க ஆசைப்படுவது வழக்கம்தான். ஆனால் அதற்காக அந்த ரசிகர்களிடம் இவ்வளவு ஒரு கண்டிப்புடன் நடக்க வேண்டிய அவசியம் இல்லை.

aiswarya lakshmi
aiswarya lakshmi

ஒரு சில படங்களில் நடித்து வெற்றியை பார்த்ததும் ஓவராகத்தான் போகிறார். இவருடைய நடித்த படங்கள் எல்லாம் எப்படி இருக்கும் என்று எங்களுக்கு தெரியாதா என்று கமெண்ட் பண்ணி மாயநதி படத்தில் நடிகருடன் ரொம்பவே நெருக்கமாக மோசமாக நடித்த படத்தின் வீடியோவை வெளியிட்டு சிலர் ஐஸ்வர்யா நடந்து கொண்டது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்று கமெண்ட் பண்ணி வருகிறார்கள்.

Trending News