முக்கிய நாளை குறி வைக்கும் ஐஸ்வர்யா, லோகேஷ்.. சிக்காமல் ஓடி ஒளியும் சூப்பர் ஸ்டாரின் ஃபிளாஷ்பேக்

RAJINI-LOKESH-AISHWARYA
RAJINI-LOKESH-AISHWARYA

Rajini-Aishwarya-Lokesh: ஜெயிலர் வெற்றிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் மிகவும் சுறுசுறுப்பாக மாறி இருக்கிறார். தற்போது லைக்கா தயாரிப்பில் பிஸியாக நடித்து வரும் ரஜினி அடுத்ததாக லோகேஷ் உடன் கூட்டணி அமைக்கிறார். இதற்கு இடையில் ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் லால் சலாம் படமும் பொங்கலுக்கு வெளிவர இருக்கிறது.

இந்நிலையில் தலைவரின் பிறந்த நாளும் வர இருக்கிறது. ஆனால் அந்த தினத்தில் ரஜினி பண்ணை வீடு, ரிஷிகேஷ் என எஸ்கேப் ஆகி விடுவார். இதற்கு முக்கிய காரணம் சில வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் தான். பொதுவாக ரஜினியின் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் அனைவரும் ஒன்று திரண்டு வந்து அவருக்கு வாழ்த்து தெரிவிப்பார்கள்.

அப்படித்தான் 80 காலகட்டத்தில் ரஜினியை காண வந்த மூன்று ரசிகர்கள் ஒரு விபத்தில் பலியாகி விட்டனர். அது சூப்பர் ஸ்டாரை மனமுடைய வைத்த நிலையில் இறந்தவர்களின் பெற்றோர்கள் கேட்ட கேள்வியும் அவருக்கு தாங்க முடியாத வேதனையை கொடுத்திருக்கிறது.

Also read: சிவகார்த்திகேயனை காப்பாத்த நங்கூரம் போல் நிற்கும் ரஜினிகாந்த்.. தலைவர் கட்டளைக்கு பம்மிய லோகேஷ்

அதன் பிறகு தான் அவர் தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டங்களை எல்லாம் தவிர்க்க ஆரம்பித்திருக்கிறார். இப்போதும் கூட சில சமயங்களில் அவரை காண ரசிகர்கள் வீட்டு வாசலில் தவம் கிடப்பதுண்டு. அவர்களுக்காகவே அவர் வெளியில் வந்து கையை காட்டி விட்டு சென்று விடுவார்.

இப்படி இருக்கும்போது டிசம்பர் 12ஆம் தேதி அன்று லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்துவதற்கு ஐஸ்வர்யா திட்டமிட்டுள்ளாராம். அதேபோன்று அன்றைய தினத்தில் தலைவர் 171 டைட்டில் அறிவிப்பை வெளியிடும் வேலையையும் ஒரு பக்கம் லோகேஷ் செய்து கொண்டிருக்கிறாராம்.

இப்படி முக்கிய நாளை இருவரும் குறி வைத்திருக்கும் நிலையில் ரஜினியின் பிளான் என்னவென்று தெரியவில்லை. ஒரு வேளை மகளை கை தூக்கி விடுவதற்காக இசை வெளியீட்டு விழாவில் அவர் கலந்து கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எது எப்படி இருந்தாலும் இதில் ரஜினி என்ன முடிவெடுப்பார் என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும்.

Also read: 23 நாட்கள் மட்டுமே நடித்துக் கொடுத்த ரஜினி.. எதிர்பார்க்காத சூப்பர் ஹிட் கொடுத்த படம்

Advertisement Amazon Prime Banner