ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

விஷ்ணு விஷாலை டம்மியாக நடிக்க வைக்கும் ஐஸ்வர்யா.. முழுக்க முழுக்க லால் சலாம் படம் சூப்பர் ஸ்டாருக்கு மட்டுமே

ரஜினிகாந்த் மகள் மற்றும் இயக்குனராக இருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நூற்றில் ஒருவராக இருக்கக் கூடாது என்பதற்காக இவரிடம் இருக்கும் திறமையை வைத்து படிப்படியாக முயற்சி செய்து முன்னேறி வருகிறார். அதற்காக தற்போது இவர் இயக்கிக் கொண்டிருக்கும் லால் சலாம் படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் மற்றும் ரஜினி நடித்து வருகிறார்கள். இதில் முக்கிய ஹீரோவாக விஷ்ணு விஷால் நடித்துள்ளார்.

ஆனால் முழுக்க முழுக்க விஷ்ணு விஷால் படமாக இருந்தால் நிச்சயமாக வியாபாரம் ஆகாது என்று தெரிந்து கொண்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காரியமாக வேறொரு முயற்சியில் இறங்கி விட்டார். அதாவது விஷ்ணு விஷால் படம் என்று சொன்னால் அது சக்சஸ்ஃபுல் ஆக போகாது என்று இவர் நினைத்திருக்கிறார். அதனால் தான் படத்தில் ரஜினியை முன்னுறுத்தும் விதமாக அவரை வைத்து ஃபாஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார்.

Also read: நெல்சனின் ராஜதந்திரத்தை தவிடு பொடியாக்கிய ஐஸ்வர்யா.. நிலைகுலைந்து போன ரஜினிகாந்த்

ஆனால் போஸ்டர் வெளியான நேரத்திலிருந்து தற்போது வரை கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும் முதலில் ரஜினியின் கதாபாத்திரத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் ஆக இருக்கும் மம்மூட்டியை நடிக்க வைப்பது தான் இவருடைய திட்டமாக இருந்தது. ஏனென்றால் இது ஒரு முஸ்லிம் கதாபாத்திரம் என்பதால் மம்முட்டி நடித்தால் மட்டும் அந்த கேரக்டர் கச்சிதமாக இருக்கும் என்று நினைத்திருந்தார்.

பிறகு மொத்த கதையும் கேட்ட ரஜினிகாந்த் இந்த கதை மிகவும் சூப்பராக இருக்கிறதே நானே அந்த மொய்தின் பாய் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்று வாண்ட்டாகவே கேட்டு களத்தில் இறங்கி விட்டார். அதனால் ஐஸ்வர்யாவும் ரொம்பவே சந்தோஷப்பட்டு முழு முயற்சியுடன் படப்பிடிப்பில் இறங்கி உள்ளார்.

Also read: அந்த காலத்திலேயே சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு போட்டி போட்ட நடிகர்.. நிலைத்து நின்ற ரஜினிகாந்த்

ஆனால் முதலில் கெஸ்ட் ரோல் என்ற கேரக்டரில் தான் ரஜினிகாந்த் நடிப்பதாக இருந்தது. அதன் பின் போகப்போக ஐஸ்வர்யாவுக்கு ஒரு எண்ணம் தோன்ற ஆரம்பித்து விட்டது. அதாவது விஷ்ணு விஷால் காட்சியை குறைத்துவிட்டு ரஜினிக்கு படத்தில் 40 நிமிடங்கள் வருவது போல் கதையே மாற்றிவிட்டார். அதனால் தற்போது இது முழுக்க முழுக்க ரஜினிகாந்த் படமாக தான் இருக்கும்.

இதற்கெல்லாம் காரணம் ரஜினியை வைத்து லாபம் வர வேண்டும் என்பதற்காக அவருக்கு மெயின் ரோலை கொடுத்துவிட்டு விஷ்ணு விஷாலை டம்மியாக ஆகிவிட்டார். பாவம் அவருக்கும் வேற வழி இல்லாமல் இவருடன் மாட்டிக் கொண்டு முழித்து வருகிறார். ஆனாலும் போஸ்டரை பார்த்து கழுவி ஊற்றிய நெட்டிசன்கள் படத்தைப் பார்த்து இன்னும் என்னெல்லாம் சொல்ல இருக்கிறார்களோ தெரியவில்லை.

Also read: தேரை இழுத்து தெருவுல விட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. திருட்டு சம்பவத்தால் வருமான வரி வரை சென்ற சோகம்

Trending News