ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

ஐஸ்வர்யா மேனனிடம் தொகுப்பாளர் கேட்ட ஒரே கேள்வி.. செல்லத்த டென்ஷன் பண்றதே வேலையா போச்சு

இப்போது சின்ன திரையில் இருந்து பெரிய திரைக்கு நடிக்க வரும் நடிகைகளின் பட்டியல் அதிகமாகிவிட்டது. அந்த வகையில் பல வருடங்களுக்கு முன்பு சன் டிவி சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். அதன் பிறகு அவர் தமிழில் காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

பிறகு அவர் கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சில திரைப்படங்களில் நடித்தார். தமிழில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவருக்கு தமிழ் படம் 2 தான் மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது. சிவா நடிப்பில் வெளிவந்த அந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா மேனன் ஹீரோயின் ஆக நடித்திருந்தார்.

அந்தப் படத்திற்கு பிறகு அவர் தமிழ் திரையுலகில் ஒரு கவனிக்கப்படும் நடிகையாக மாறினார். மேலும் அவருக்கு ஏராளமான ரசிகர்களும் இருந்தனர். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தன்னுடைய கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை இம்ப்ரஸ் செய்து வந்தார்.

சில காலங்கள் தமிழில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்த இவர் தற்போது வேழம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அதில் தொகுப்பாளர் கேட்ட பல கேள்விகளுக்கும் இவர் மிகவும் சுவாரஸ்யமாக பதிலளித்தார்.

ஆனால் தொகுப்பாளர் கேட்ட ஒரே ஒரு கேள்வி மட்டும் இவரை சற்று கடுப்பாகிவிட்டது. அதாவது இவரிடம் நீங்கள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஐஸ்வர்யா மேனன் ஒவ்வொரு ஆண்டும் ஒருவருடைய தோற்றத்தில் மாற்றம் ஏற்படும்.

பத்து வருடங்களுக்கு முன்பு நீங்கள் என்னை சீரியலில் பார்த்ததற்கும் இப்போது பார்ப்பதற்கும் நிறைய மாற்றம் இருக்கிறது. இதுதான் காரணமே தவிர நான் அறுவை சிகிச்சை எதுவும் செய்து கொள்ளவில்லை என்று ரொம்பவும் கறாராக பேசினார்.

Trending News