திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு பில்டப் கொடுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரலாகும் புகைப்படம்

இன்றைய கோலிவுட் சினிமா வட்டாரத்தில் நல்ல தமிழ் பேச தெரிந்த திறமையான நடிகை என்றால் அது ஐஸ்வர்யா ராஜேஷ் தான். இவர் நடித்த காக்கா முட்டை, வடசென்னை, கனா போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது.

aishwarya-rajesh-3
aishwarya-rajesh-3

ஐஸ்வர்யா தன்னை தேடி வரும் கதைகளில் எல்லாம் நடிக்காமல் நல்ல கதைகள், தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் மட்டுமே தேர்வு செய்து நடிப்பதால் மக்களால் கொண்டாடப்படும் நாயகியாக சிறந்து விளங்குகிறார்.

Also Read : ஐஸ்வர்யா ராஜேஷை கதிகலங்க செய்யும் நடிகை.. சத்தமே இல்லாமல் கைநழுவி போகும் படங்கள்

ஐஸ்வர்யா ராஜேஷ் முதலில் அசத்த போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தார். பின்பு பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த அட்டகத்தி படத்தில் கேரக்டர் ரோலில் நடித்தார். நடிகர் தனுஷ் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காக்கா முட்டை திரைப்படம் ஒரு நல்ல ரீச்சை கொடுத்தது.

aishwarya-rajesh-3
aishwarya-rajesh-3

இவர் சமீபத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்த க/பெ ரணசிங்கம், பூமிகா, திட்டம் இரண்டு போன்ற திரைப்படங்களில் தன்னுடைய தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தினார். இப்போது இயக்குனர் கின் ஸ்லின் இயக்கத்தில் டிரைவர் ஜமுனா திரைப்படத்தில் கால் டாக்சி ஓட்டுநராக நடித்திருக்கிறார்.

Also Read : திருமணமான நடிகருடன் நெருக்கம் காட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. நைட் பார்ட்டியில் அடிக்கும் கூத்து

மேலும் கண்ணன் இயக்கத்தில் மலையாளத்தில் ரிலீஸ் ஆகி ஹிட் ஆன ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து இருக்கிறார். அதே போல் பர்ஹானா, சொப்பன சுந்தரி, துருவ நட்சத்திரம், மோகன்தாஸ் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

aishwarya-rajesh-3
aishwarya-rajesh-3

சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா சென்ற ஐஸ்வர்யா ராஜேஷ் அங்கிருந்து தன்னுடைய புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். ஐஸ்வர்யாவின் ரீசன்ட் போஸ்டில் பிரவுன் கலர் க்ளோஸ் நெக் டீசர்ட் மற்றும் வெள்ளை நிற ஜீன்ஸ் அணிந்து கூலாக சன் கிளாஸுடன் ஹாலிவுட் ஹீரோயின் போல போஸ் கொடுத்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் இப்போது வைரலாகி கொண்டிருக்கிறது.

Also Read : நயன்தாரா இடத்தை பிடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் போட்ட கண்டிஷன்.. இப்படியே போனால் ஹீரோக்களின் நிலைமை

Trending News