புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

ஐஸ்வர்யா ராய் விவாகரத்து? ரியாலிட்டி ஷோவில் எக்ஸ் காதலன் சல்மான் கான் ஓபன் டாக்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான். அவருக்கு இந்தியாவில் லட்சக்கணக்கான ரசிகர் கள் உள்ளனர். அவரது சமூக வலைதள பக்கத்தையும் மில்லியன் கணக்கில் ஃபாலோ செய்கிறார்கள். இவர் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி, பீயிங் ஹியூமன் என்ற நிறுவனத்தையும் நடத்தி வருவதுடன், இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இவருக்கு பிரபல தாதாவிடம் இருந்து கொலைமிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இவர் முன்னாள் உலக அழகியும் அவரது முன்னாள் காதலியுமான ஐஸ்வர்யா ராயை அடித்தாக பிரபல நடிகை ஒருவர் கூறி பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

தனது முன்னாள் காதலி ஐஸ்வர்யா ராய் பற்றி சல்மான் கான் கருத்து

இத்தனை ஆண்டுகள் கழித்து தனது முன்னாள் காதலி ஐஸ்வர்யா ராய் பற்றி சல்மான் கான் கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த 2000 ஆம் ஆண்டுகளின் ஆரம்ப்த்தில், சல்மான் கானும், ஐஸ்வர்யா ராயும் காதலித்து வந்தனர். இரண்டு ஆண்டுகளே இவர்களின் காதல் நீடித்து வந்த நிலையில், 2002 ஆம் ஆண்டு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். அதன்பின், இருவரும் தங்கள் உறவுகள் பற்றி வெளிப்படையாக பேசவில்லை.

அதன்பின், சல்மான் கான் நடிப்பில் பிஸியாகி சூப்பர் ஸ்டாராக உயர்ந்து விட்டார். ஆனால் இன்னும் திருமணமே செய்யாமல் முரட்டு சிங்கிலாக இருக்கிறார். ஐஸ்வர்யா ராய் , அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு ஒரு தயாக தன் குழந்தை மற்றும் குடும்பத்தை கவனித்து வருவதுடன் சினிமாவிலும் நடித்து வருகிறார். ஆனால் அபிஷேக் பச்சனை அவர் விவாகரத்து செய்யப் போவதாக வெளியாகும் தகவல் பாலிவுட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த நிலையில், ஒரு ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்ட சல்மான் கானிடம் ஐஸ்வர்யா ராய் விவாகரத்து செய்யப் போவதாக வெளியான தகவல் பற்றிக் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், இதில் நான் என்ன செய்ய முடியும். அது அவரது தனிப்பட்ட வாழ்க்கை, அவர் இப்பொது வேறு ஒருவரின் மனைவி. அவர் மிகப்பெரிய குடும்பத்தில் திருமணம் செய்திருக்கிறார். அபிஷேக் பச்சனின் மனைவி, அவரும் சிறந்தவர்.

இதைத்தான் எந்த முன்னாள் காதலனும் செய்ய விரும்புவார். ஒருவரை வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டால் நீங்கள் இல்லாவிட்டாலும் கூட அவர் சந்தோசமாக இருக்க வேண்டும். இதனால் உங்கள் மீது தவறில்லை எனும் உணர்வு உங்களுக்கு ஏற்படும். நீங்கள் இல்லாமல் அவர் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்ப்பது நல்லது. நானும் அப்படித்தான் உணர்கிறேன் என்று கூறியுள்ளார்.

மனதில் பழைய நினைவுகள் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் ஐஸ்வர்யா ராய் அவரது கணவர் அபிஷேக் மற்றும் அவர்களின் குடும்பத்தை இப்படி உயர்வாய் பேசியிருக்கிறாரே என சல்மான் கானை பலரும் பாராட்டி பேசி வருகின்றனர். இதுகுறித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending News