செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

ஐஸ்வர்யா ராஜேஷின் பூமிகா படத்தின் விமர்சனம்.. ட்விட்டரை தெறிக்கவிட்ட வைரல் பதிவு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவரது நடிப்பில் வெளியான படங்கள் சமீபகாலமாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதனால் தொடர்ந்து பல இயக்குனர்களும் ஐஸ்வர்யா ராஜேஷ் வைத்து படங்களை இயக்கி வருகின்றனர்.

ஐஸ்வர்யா ராஜேஷ் இயற்கையை வைத்து உருவாகியுள்ள பூமிகா என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விஜய் டிவி வெளியிட்டுள்ளனர். அதன் பிறகு நெட்பிளிக்ஸ் தளத்திற்கும் படக்குழுவினர் கொடுத்துள்ளனர்.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் பூமிகா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று உள்ளது. பதில் சொல்ல வந்த கருத்து முழுமையாக சொல்லாமல் இருப்பது போல் இருப்பதாக பலரும் கூறியுள்ளனர். மேலும் 1 பாதி நன்றாக இருப்பதாகவும் ஆனால் 2 பாதி தான் நன்றாக இல்லை என தெரிவித்துள்ளனர்.

boomika-twit
boomika-twit

மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பு படத்தில் சிறப்பாக இருப்பதாகவும் ஆனால் மற்ற நடிகர்களின் நடிப்பு சீரியல் நடிகர்களின் நடிப்பு போல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். அது மட்டுமில்லாமல் ஒரு சில இடங்களில் சொல்லவந்த கருத்தை சொல்லாமல் இருப்பதாகவும் கூறியுள்ளனர். இதனால் படத்தின் கதையை முழுமையாக புரியவில்லை என கூறியுள்ளனர்.

boomika
boomika

விஜய் டிவி சும்மாவே விளம்பரம் அதிகமாக போடுவார்கள் புது படம் வாங்கினால் சும்மா இருப்பார்களா இப்படம் வெளியான உடன் அதிகமான விளம்பரங்கள் ஒளிபரப்பான தான் படத்தின் திரில்லர் காட்சிகளை ரசிகர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். தற்போது பூமியை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

boomika-twit
boomika-twit

Trending News