திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அண்ணனுக்காக கெஞ்சி மூக்குடைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்.. இந்த சிபாரிசு எல்லாம் எங்க கிட்ட செல்லாது அம்மணி

ஐஸ்வர்யா ராஜேஷ் ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து தற்போது ஹீரோயினாக தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் கலக்கி வருகிறார். நன்றாக நடிக்க தெரிந்த நடிகை என்று பெயர் வாங்கிய இவர் சமீப காலமாக சில சர்ச்சைகளை சந்தித்து வருகிறார். அதாவது முன்னணி நடிகையாக மாறிவிட்டதால் இவருக்கு தற்போது தலைகணம் கூடி விட்டதாக செய்திகள் உலா வருகிறது.

அது மட்டுமல்லாமல் அடிக்கடி பார்ட்டி, பப் போன்ற இடங்களுக்கு செல்வது, சக நடிகருடன் நெருக்கம் காட்டுவது என்று இவருடைய பெயர் மொத்தமாக டேமேஜ் ஆகி வருகிறது. மேலும் அடக்க ஒடுக்கமாக மட்டுமே இதுவரை நடித்து வந்த இவர் சமீப காலமாக கிளாமர் ரூட்டுக்கு மாறியிருக்கிறார். இப்படி அவரைப் பற்றி பல புகார்கள் எழுந்து வருகிறது.

Also read: ரிஸ்க் எடுத்து நடிச்ச ஐஸ்வர்யா ராஜேஷ்.. மொத்த பிளானையும் சொதப்பிவிட்ட பிரதீப்

இந்நிலையில் தன் அண்ணனுக்காக ஓட்டு கேட்ட இவரை ரசிகர்கள் நோஸ்கட் செய்துள்ளனர். இவருடைய அண்ணன் மணிகண்டன் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக இருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் அமைதியாக வலம் வந்த இவர் சில நாட்களுக்கு முன்பு தனலட்சுமி உடன் சண்டை போட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதைத்தொடர்ந்து தற்போது அவர் இந்த வார நாமினேஷன் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார். அதனால் இவருடைய தங்கையான ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தன் அண்ணனுக்காக சோசியல் மீடியாவில் ஓட்டு கேட்டு வருகிறார். இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு ராபர்ட் மாஸ்டர் அல்லது ராம் இருவரில் ஒருவர் தான் வெளியேறுவார்கள் என்று கூறுகின்றனர்.

Also read: கதை தான் முக்கியம் என ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 5 படங்கள்.. யாரும் எதிர்பார்க்காத ரோலில் டிரைவர் ஜமுனா

ஆனால் மணிகண்டனுக்கும் குறைவான ஓட்டுகள்தான் கிடைத்திருக்கிறது. அந்த வகையில் யார் வேண்டுமானாலும் வெளியேறலாம் என்ற நிலை தான் தற்போது இருக்கிறது. அதனால் தான் ஐஸ்வர்யா ராஜேஷ் தன் அண்ணனை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்ற நோக்கத்தில் இப்படி ஓட்டு கேட்டு கெஞ்சி வருகிறார்.

ஆனால் அதைப் பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேலை. உங்கள் அண்ணன் நன்றாக விளையாடினால் பிக் பாஸ் வீட்டுக்குள் இருப்பார். அப்படி இல்லை என்றால் எலிமினேட் ஆவார். நீங்கள் நடிக்கும் வேலையை மட்டும் பாருங்கள் என்று அவரை நோஸ்கட் செய்து கமெண்ட் கொடுத்து வருகின்றனர். இருப்பினும் அவர் தன் அண்ணன் மேல் உள்ள பாசத்தினால் ஓட்டு கேட்டு வருகிறார்.

Also read: திருமணமான நடிகருடன் நெருக்கம் காட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. நைட் பார்ட்டியில் அடிக்கும் கூத்து

Trending News