வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

காற்று வாங்கிய தியேட்டர்.. தொடர் பிளாப்பால் விரக்தியில் ஐஸ்வர்யா ராஜேஷ்

ஐஸ்வர்யா ராஜேஷ் சின்னத்திரையில் இருந்து வெள்ளிதிரைக்கு வந்தாலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை ஆழமாகவே பதித்தார். இந்நிலையில் சமீபகாலமாக அவரை கெட்ட நேரம் பிடித்து ஆட்டி வருகிறது.

அதாவது ஐஸ்வர்யா ராஜேஷ் கடந்த சில வருடங்களாகவே கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஆனாலும் அந்த படங்கள் எதிர்பாராத விதமாக தொடர் தோல்வியை தந்து வருகிறது. அந்த வகையில் டிரைவர் ஜமுனா, ரன் பேபி ரன் இன்னும் சில படங்கள் தோல்வியை தழுவியது.

Also Read : ஐஸ்வர்யா ராஜேஷ் ஓவர் நெருக்கம் காட்டிய 4 படங்கள்.. விஜய் சேதுபதியுடன் கிசுகிசுக்கப்பட்ட அந்த படம்

இப்படி இருக்கும் சூழலில் ஃபர்ஹானா என்ற படத்தின் மீது ஐஸ்வர்யா ராஜேஷ் முழு நம்பிக்கை வைத்திருந்தார். அதன்படி நேற்று இவரின் ஃபர்ஹானா படத்துடன் சேர்த்து கஸ்டடி, குட் நைட் மற்றும் இராவண கோட்டம் படங்கள் திரையரங்குகளில் வெளியானது. இதில் ஐஸ்வர்யா ராஜேஷின் படத்திற்கு திரையரங்குகள் வெறிச்சோடி காணப்பட்டது.

படத்திற்கு பாதி டிக்கெட்டுகள் மட்டுமே விற்கப்பட்டிருந்ததாம். இந்த விஷயம் கேட்டு ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது மிகுந்த மன வருத்தத்தில் உள்ளாராம். அதாவது இந்தப் படத்தை பெரிதும் நம்பி இருந்த நிலையில் கைவிட்டதே என்ற உச்சகட்ட விரக்திக்கு சென்றுவிட்டாராம். அடுத்ததாக என்ன செய்யப் போகிறோம் என்ற குழப்பத்திலும் இருந்துள்ளார்.

Also Read : ஐஸ்வர்யா ராஜேஷ் தேர்ந்தெடுத்த 5 அற்புதமான கதைகள்.. ஆண்களுக்கு சவுக்கடி கொடுத்த கிரேட் இந்தியன் கிச்சன்

எனவே இப்போது டாப் நடிகர்களின் படங்களில் வாய்ப்பு கேட்டு வருகிறாராம் ஐஸ்வர்யா ராஜேஷ். அதுவும் செகண்ட் ஹீரோயின் சப்ஜெக்ட்டாக இருந்தாலும் பரவாயில்லை என்று கூறுகிறாராம். ஏற்கனவே இப்படி தான் ஐஸ்வர்யா ராஜேஷ் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்துக் கூட பெயரை வாங்கி உள்ளார்.

ஆகையால் டாப் நடிகர்களின் படத்தில் நடித்தால் நம்மை ரசிகர்கள் கவனிக்கப்படுவார்கள், அதன் மூலம் விட்ட மார்க்கெட்டை பிடித்து விடலாம் என்ற எண்ணத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் செயல்பட்டு வருகிறார். அது எந்த அளவுக்கு வொர்க் அவுட் ஆகும் என்பது தெரியவில்லை. ஆனாலும் இப்போது அதற்கான முயற்சியில் முழு வீச்சில் ஐஸ்வர்யா ராஜேஷ் இறங்கி உள்ளார்.

Also Read : ப்ளாப் ஆனாலும் கோடிக்கணக்கில் சம்பளம் கேட்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. போஸ்டர் ஒட்டுன காசு கூட எடுக்க முடியலையாம்

Trending News