வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

உனக்கெல்லாம் ஃப்ரெண்ட் ரோல் கூட கிடைக்காது.. அசிங்கப்படுத்தப்பட்ட ஐஸ்வர்யா ராஜேஷுக்கு குவியும் விருதுகள்

Actress Aishwarya Rajesh: கோலிவுட்டில் அழகிய தமிழ் பேச கூடிய தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகை தான் ஐஸ்வர்யா ராஜேஷ். பெரும்பாலும் தமிழ் சினிமாவில் மலையாளம், தெலுங்கு, கன்னட நடிகைகளின் ஆதிக்கம் தான் அதிகமாக இருக்கக்கூடிய சூழ்நிலையில், தமிழச்சி ஐஸ்வர்யா ராஜேஷின் வருகைக்கு ரசிகர்கள் தங்களது அமோக ஆதரவை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது முன்னணி நடிகையாக வருவதற்கு ஏகப்பட்ட அவமானங்களை சந்தித்திருக்கிறார். அதிலும் இயக்குனர் ஒருவரிடம் இவர் சான்ஸ் கேட்டபோது ‘உனக்கெல்லாம் பிரண்டோட ஃப்ரெண்ட் ரோல் கூட கிடைக்காது’ என அசிங்கப்படுத்தி அனுப்பி இருக்கிறார். ஆனால் அவர்களுக்கெல்லாம் தற்போது சரியான பதிலடி கொடுக்கும் விதமாக ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஏகப்பட்ட விருதுகள் தற்போது குவிகிறது.

Also Read: 2023 டாப் லிஸ்டில் இடம் பெற்ற 10 ஹீரோயின்கள்.. நயனை ஓரங்கட்ட எல்லை மீறிய சமந்தா

சென்னை ஹவுஸிங் போர்டில் சாதாரண குடும்பத்தில் பிறந்த ஐஸ்வர்யா ராஜேஷ், தன்னுடைய 8 வயதில் தந்தையை இழந்தார். அதன் பிறகு மூத்த அண்ணன் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட நிலையில், 2வது அண்ணனும் கார் விபத்தில் உயிரிழந்தார். இப்படி அடுத்தடுத்த உயிரிழப்புகளை சந்தித்த ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய அண்ணன் மணிகண்டனுடன் பள்ளி படிப்பை படித்துக் கொண்டிருக்கும் போதே, பார்ட் டைம் ஜாப்க்கு சென்று வந்தார்.

இவருக்கு டான்ஸ், ஆக்டிங் மிகவும் பிடிக்கும் என்பதால் அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி, அதன் பிறகு மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியிலும் பங்கேற்று வெற்றி பெற்றார். அதன்பின் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார். முதன்முதலாக அட்டகத்தி படத்தில் சிறு வேடத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், அதன்பின் காக்கா முட்டை படத்தில் 2 பிள்ளைகளுக்கு தாயாக எந்தவித தயக்கமும் இல்லாமல் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிக்காட்டினார்.

Also Read: நயன், திரிஷாவை ஓரம் கட்டிய ஐந்து “ஏ” கிரேடு நடிகைகள்.. லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு நாங்க சளச்சவங்க இல்லை

இந்த படத்திற்காக இவருக்கு சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதும் கிடைத்தது. அதன் பின் வடசென்னை, கானா போன்ற படங்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. பின்பு தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தியிலும் தெலுங்கிலும் அறிமுகமான ஐஸ்வர்யா ராஜேஷ் அங்கும் தன்னுடைய தனித்துவமான நடிப்பை வெளிக்காட்டினார். இவர் நடிக்கும் படங்களில் எல்லாம் செம போல்டான கேரக்டரை துணிச்சலுடன் நடிக்கக் கூடியவர்.

இவருக்கு முதலில் ஃப்ரெண்ட் ரோல் கூட கிடைக்காது என விமர்சித்த இயக்குனர்கள், இப்போது போட்டி போட்டுக் கொண்டு தங்கள் படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷை கமிட் செய்கின்றனர். எந்த சினிமாவில் ஃப்ரெண்ட் ரோல் கூட கிடைக்காது என அசிங்கப்பட்டாரோ அதே சினிமாவில் தற்போது உச்ச நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் 4 முறை தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளையும், 1 தென்னிந்திய பிலிம் பேர் விருதும், 1 தமிழ்நாடு மாநில திரைப்பட விருதையும் அடுத்தடுத்து வாங்கிக் குவித்திருக்கிறார். இதையெல்லாம் அவர் தன்னை அவமானப்படுத்தியவர்களுக்கு கொடுத்த பதிலடியாகவே பார்க்கிறார்.

Also Read: எனக்கு போட்டி இவங்க 4 பேரும் தான்.. வெளிப்படையாய் சவால் விட்ட ப்ரியா பவானி சங்கர்

Trending News