புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஆட்டோவில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஏற்பட்ட அத்துமீறல்.. துணிச்சலுடன் எதிர்கொண்ட சம்பவம்

Aishwarya Rajesh: ஐஸ்வர்யா ராஜேஷ் மிகவும் துணிச்சலான நடிகை என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதாபாத்திரங்கள் கூட மிகவும் துணிச்சல் வாய்ந்ததாக தான் இருந்து வருகிறது. சினிமா பின்புலம் இல்லாமல் சின்னத்திரையில் இருந்து வந்து இப்போது மிகப்பெரிய உயரத்தை அடைந்திருக்கிறார்.

ஒரு காலகட்டத்தில் ஹிட் படங்களை கொடுத்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு சமீபகாலமாக படங்கள் எதுவும் பெரிய அளவில் போகவில்லை. ஆனாலும் மனம் தளராத அவர் தொடர்ந்து தனது பணியை செய்து வருகிறார். அந்த வகையில் இப்போது ஒரு பட பிரமோஷனுக்காக ஐஸ்வர்யா ராஜேஷ் பேட்டி கொடுத்திருந்தார்.

Also Read : ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு போட்டியாக தொடர் பிளாப் கொடுக்கும் ரீ என்ட்ரி குயின்.. இப்படியே போனா தல தப்பாது

அதாவது சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் தலை தூக்கி உள்ள நிலையை நடிகைகள் இதை பற்றி வெளிப்படையாக கூறிவருகிறார்கள். இது சின்ன நடிகைகள், பெரிய நடிகைகள் என பாரபட்சம் பார்க்காமல் எல்லோருக்குமே ஏற்பட்டு தான் வருகிறது. இது சினிமாவில் மட்டும் இல்லை என்பதை விளக்கும்படியாக தன் வாழ்வில் நடந்த விஷயம் ஒன்றை ஐஸ்வர்யா ராஜேஷ் பகிர்ந்திருக்கிறார்.

அதாவது ஐஸ்வர்யா ராஜேஷ் கல்லூரி படிக்கும் போது ஒரு ஆட்டோவில் பயணித்து வந்தாராம். அந்தச் சமயத்தில் தனது அருகில் உள்ள ஆண் நபர் ஒருவர் அவர் மீது கை வைத்திருக்கிறார். இதனால் ஐஸ்வர்யா ராஜேஷ் கோபப்பட்டு உடனடியாகவே ஆட்டோவை நிறுத்தும்படி கூறிவிட்டாராம். அதன் பிறகு ஆட்டோ டிரைவரிடம் நடந்ததை கூறி இருக்கிறார்.

Also Read : வாணி போஜன் போல் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஏற்பட்ட அவமானம்.. விக்ரம் படத்தால் அடுத்தடுத்து விழும் பெரிய அடி

அவர் அந்த அத்துமீறிய நபரை கடுமையாகத் திட்டி ஆட்டோவில் இருந்து உடனடியாக இறங்கச் செய்துவிட்டாராம். இவ்வாறு பெண்களுக்கு பேருந்து, ஆட்டோ என எங்கு சென்றாலும் பிரச்சனை இருந்து தான் வருகிறது. அதையும் எதிர்கொண்டு எதிர்நீச்சல் போட்டால் இங்கு வாழ வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.

மேலும் தனக்கு இவ்வாறு நடந்த விஷயத்தை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளிப்படையாக கூறியது பாராட்டுக்குரிய விஷயம் தான். மேலும் இவரைப் போலவே மற்ற பெண்களுக்கு எங்கு அநீதி நடந்தாலும் குரல் கொடுத்தால் தங்களை தாங்களே காத்துக் கொள்ள முடியும்.

Also Read : ஜொலிக்க முடியாமல் போன வெற்றி பட நாயகி.. ஐஸ்வர்யா ராஜேஷ் போல் வளர முடியாத ஹீரோயின்

Trending News