திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

வாணி போஜன் போல் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஏற்பட்ட அவமானம்.. விக்ரம் படத்தால் அடுத்தடுத்து விழும் பெரிய அடி

Aishwarya Rajesh: ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். தனது திறமையின் மூலம் முன்னுக்கு வந்தாலும் கடந்த சில வருடங்களாக அவருடைய நடிப்பில் எந்த படமும் வெற்றி பெறவில்லை. அதுவும் மாதத்திற்கு மூன்று படங்களாவது ஐஸ்வர்யா ராஜேஷ் படங்கள் வெளியாகி இருந்தது.

அவ்வாறு தனக்கு வருகின்ற படங்களை எல்லாம் கமிட் செய்து நடித்து வந்தார். இதனால் ஐஸ்வர்யா ராஜேஷின் மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமாக சரியத் தொடங்கியது. இந்த சூழலில் அவரின் கேரியர் மொத்தமாக போகும் அளவிற்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதுவும் நடிகை வாணி போஜனனுக்கு ஏற்பட்ட அவமானம் போல் இவருக்கும் ஏற்பட்டு இருக்கிறது.

Also Read : ஜொலிக்க முடியாமல் போன வெற்றி பட நாயகி.. ஐஸ்வர்யா ராஜேஷ் போல் வளர முடியாத ஹீரோயின்

இதில் என்ன ஒற்றுமை என்றால் இருவருமே விக்ரம் படத்தால் பெருத்த அடி வாங்கி இருக்கிறார்கள். அதாவது வாணி போஜன் விக்ரமின் மகான் படத்தில் நடித்திருந்தார். சில காட்சிகளில் மட்டுமே அவர் நடித்த நிலையில் திரையரங்குகளில் அவரை பார்க்கவே ரசிகர்கள் ஆர்வமாக சென்றிருந்தனர். ஆனால் அவர் நடித்த காட்சியை படக்குழு கட் செய்து விட்டது.

வளர்ந்து வரும் நடிகை வாணி போஜனுக்கு தான் இப்படி நடந்தது என்றால் இதே நிலைமை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது அரங்கேறி இருக்கிறது. அதாவது கடந்த சில வருடங்கள் முன் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் விக்ரம் கூட்டணியில் துருவ நட்சத்திரம் படம் உருவாகி இருந்தது. தயாரிப்பு நிறுவனத்தின் நிதி நெருக்கடியால் இந்த படத்தை வெளியிட முடியாமல் படக்குழு திணறி வந்தது.

Also Read : 2 வருடங்களாக வாய்ப்பே தராத நடிகர்கள்.. ஐஸ்வர்யா ராஜேஷ் எடுத்த அதிரடி முடிவு

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ஓ மனம் என்ற பாடல் இரண்டு வருடங்களுக்கு முன்பே வெளியிடப்பட்டது. ஆனால் இப்போது கௌதம் மேனன் துருவ நட்சத்திரம் படத்தின் சில காட்சிகளை கட் செய்து வருகிறாராம். அதுவும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காட்சிகள் மொத்தமாக நீக்கப்படுவதாக தகவல் வெளியானது.

இந்த சூழலில் புது பொலிவுடன் ஓ மனம் பாடலை மீண்டும் படக்குழு வெளியிட்டு இருக்கிறது. அதில் ஐஸ்வர்யா இடம்பெற்ற காட்சிகள் தற்போது நீக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த மொத்த காட்சி நீக்கப்பட்டது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதனால் ஐஸ்வர்யா ராஜேஷின் சினிமா கேரியர் கேள்விக்குறியாகி உள்ளது.

Also Read : உச்சம் தொட்டாலும் அலட்டலும், ஆணவமும் இல்லாத 5 நடிகர்கள்.. எதையும் கொண்டாடாத விக்ரம்

Trending News