வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பெண்களின் உழைப்பை சுரண்டும் குடும்பங்கள்.. மலையாள சினிமாவை மிஞ்சியதா தி கிரேட் இந்தியன் கிச்சன் விமர்சனம்

மலையாளத்தில் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் தமிழில் இந்த படம் ரீமேக் செய்யபட்டுள்ளது. இப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். குடும்பங்களில் பெண்களின் உழைப்பை எவ்வாறு சுரண்டுகிறார்கள் என்பது தான் இப்படத்தின் கதை.

அதாவது திருமணத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டில் சமைப்பது, பாத்திரம் கழுவுவது என தொடர்ந்து இதே வேலைகளை செய்து வருகிறார். இந்த காட்சிகளை தொடர்ந்து பார்க்கும் போது ரசிகர்களுக்கு அலுப்பு தட்டுகிறது. அப்படி இருக்கையில் தினமும் வீட்டில் உள்ள பெண்கள் இப்படியே செய்து வருவதால் அவர்களுக்கு எப்படி இருக்கும்.

Also Read : காசுக்காக சீப்பான வேலையை பார்த்த ஐஸ்வர்யா ராஜேஷ்.. வாயில் வயிற்றில் அடித்துக் கொள்ளும் தயாரிப்பாளர்

ஒரு ஆணாதிக்கச் சமூகம் வீட்டு சிறையில் பெண்களை எப்படி வைத்துள்ளார்கள் என்பது தான் தி கிரேட் இந்தியன் கிச்சன். மேலும் கடைசியில் ஐஸ்வர்யா ராஜேஷ் இதிலிருந்து மீண்டு வர என்ன முடிவு எடுக்கிறார் என்பது கிளைமேக்ஸ். முதல் பாதி சற்று மந்தமாக சென்றாலும், இரண்டாம் பாதி விறுவிறுப்பாக செல்கிறது.

மேலும் படம் முழுக்க ஒரு வீட்டைச் சுற்றியே நகர்கிறது. இந்த படத்திற்கு பிளஸ் பாயிண்ட் என்னவென்றால் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு. அவரை தவிர மற்ற நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கு என்ன வேண்டுமோ அதை மட்டுமே செய்துள்ளார்கள்.

Also Read : கோவிலுக்கு பெண்கள் போகக்கூடாதுனு எந்த சாமி சொல்லுச்சு.. புது சர்ச்சையுயை கிளப்பியுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ்

மலையாளத்தில் பார்க்கும்போது வீட்டில் உள்ள பெண்கள் என்னென்ன விஷயங்கள் செய்கிறார்கள் என்பதை தெள்ளத்தெளிவாக காட்டி இருப்பார்கள். அதை பார்க்கும் ஆண்களுக்கே பெண்கள் இவ்வளவு வேலைகள் செய்கிறார்களா என்பது தெரிய வரும். ஆனால் தமிழில் அதை கொண்டு வர இயக்குனர் தவறிவிட்டார்.

மேலும் படத்தில் இடம்பெறும் வசனங்கள் நன்றாக உள்ளது. ஆண் சமுதாயத்திற்கு நல்ல கருத்தை புகுக்கும் விதமாக தி கிரேட் இந்தியன் கிச்சன் படம் அமைந்துள்ளது. ஆனால் மலையாளத்தில் தி கிரேட் இந்தியன் படத்தை பார்க்கும் போது ஏற்பட்ட தாக்கம் தமிழில் இல்லை என்பது தான் ரசிகர்களின் கருத்து.

Also Read : முழு பூசணிக்காயை சோற்றில் போட்டு மறைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. இதெல்லாம் ஒரு பொழப்பா

Trending News