நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபகாலமாக தேர்ந்தெடுக்கும் நடிக்கும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு விதவிதமான கேரக்டர்களை கொடுத்து தங்களது படத்தில் நடிக்க வைக்க பல இயக்குனர்கள் வரிசைகட்டி நிற்கின்றனர்.
ஐஸ்வர்யா ராஜேஷ் அடுத்தபடியாக இவர் அதிரடி ஆக்ஷன் கிங் அர்ஜுனுடன் இணைந்து நடிக்கவுள்ளார். அத்துடன் தெலுங்கு பிரபலம் சாய் தரம் தேஜ் நடிப்பில் உருவாகும் ரிபப்ளிக் என்ற படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் அளித்துள்ள பேட்டியில், ‘உங்களுடைய ரோல் மாடல் யார்?’ என்று செய்தியாளர்கள் கேட்ட உடன், ‘சமந்தா தான் எனது ரோல் மாடல்’ என்று வெளிப்படியாகக் கூறி ரசிகர்களை அசர வைத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு படங்களில் தன்னுடைய இயல்பான நடிப்பினால் ரசிகர்களை வசியம் செய்துள்ள சமந்தா, திருமணத்திற்கு முன்பும் அதற்குப் பிறகும் தனக்குப் பிடித்த செயலை செய்வதில் தயக்கம் காட்டியதில்லை.
அவர் தற்போது myntra என்ற ஆடை வடிவமைப்பு நிறுவனத்தை சிறப்பாக உருவாக்கி செயல்படுத்துவது மட்டுமல்லாமல், அதற்காக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளார்.
இருப்பினும் தற்போது சமந்தா தன்னுடைய கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து கொள்ளப் போகிறாரா, இல்லையா என்ற சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ள நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் சமந்தாவை பற்றி உயர்வாக கூறியிருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.