திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

நயன்தாரா இடத்தை பிடிக்கப் போகும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. ஒரே வாரத்தில் அடுத்தடுத்து வெளியாகும் 3 படங்கள்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தில் உள்ளார். இவர் தான் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதலிடத்தில் இருக்கிறார். ஆனால் இவரது நடிப்பில் வெளியான படங்கள் இந்த வருடம் சரிவரப் போகவில்லை. கடைசியாக வெளியான கணக்கு படமும் வசூலில் பாதித்துள்ளது. இப்போது நயன்தாராவின் இடத்தை ஐஸ்வர்யா ராஜேஷால் ஆபத்து வந்துள்ளது.

ஐஸ்வர்யா ராஜேஷ் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரம் என்றால் எதற்கும் தயங்காமல், மற்ற ஹீரோயின்களை பயப்படும் கதாபாத்திரத்தையும் ஏற்று நடிப்பார். அந்த அளவுக்கு சினிமாவில் இவருடைய அர்ப்பணிப்பு மிகப்பெரியது. இப்போது இவரது கையில் ஒரு டசன் படங்கள் வைத்துள்ளாராம்.

Also Read : அப்படி மட்டும் படுக்கவே மாட்டேன்.. கனெக்ட் படத்தை விட நேரில் பயமுறுத்தும் நயன்தாரா

அதில் இப்போது அரை டசன் படங்களில் நடித்து முடித்து விட்டார். எல்லாமே இப்போது ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. மேலும் இதில் முக்காவாசி படங்கள் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படங்களாம். இப்போது ஒரே வாரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் அடுத்தடுத்த 3 படங்கள் வெளியாக உள்ளது.

அதில் இப்போது வருகின்ற டிசம்பர் 30 டிரைவர் ஜமுனா படம் வெளியாக உள்ளது. இந்தப் படம் முழுக்க முழுக்க ஆக்சன் கதை களத்தை கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் டிரைவர் ஜமுனா படம் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Also Read : தாராளமாக கிளாமர் காட்ட களத்தில் இறங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்.. கேட்டவுடன் கிக் ஏத்தும் படத்தின் டைட்டில்

மேலும் டிரைவர் ஜமுனா படத்திற்கு முன்னதாக தி கிரேட் இந்தியன் கிச்சன் படம் டிசம்பர் 29ஆம் தேதி வெளியாக உள்ளது. மலையாள மொழியில் உருவான இந்தப் படத்தில் தமிழ் ரீமேக் ஆகும். இந்த படத்திற்கும் முன்னதாகவே டிசம்பர் 26 ஆம் தேதி ஃபர்ஹானா என்ற படம் வெளியாக உள்ளது.

இது தவிர அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஐஸ்வர்யா ராஜேஷின் படங்கள் வரிசையாக வெளியாக உள்ளது. ஆகையால் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தை இனிமேல் ஐஸ்வர்யா ராஜேஷ் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இப்போது அவர் காட்டில் பண மழை பெய்கிறது.

Also Read : குந்தவை மார்க்கெட்டை சரிக்க பக்கா பிளான் போட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்.. விட்ட இடத்தை பிடிக்க போராடும் த்ரிஷா

Trending News