வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

உதயநிதியால் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு வந்த சிக்கல்.. எதுவுமே கிடைக்காததால் எடுத்த விபரீத முடிவு

சினிமா தயாரிப்பாளர் மற்றும் நடிகராக இருந்த உதயநிதி ஸ்டாலின் இப்போது அமைச்சராகி இருக்கிறார். அமைச்சரானதால் இனி சினிமாவுக்கு முழுக்கு போட இருப்பதாக இவர் தெரிவித்திருக்கிறார். இவர் சமீபத்தில் கமலின் தயாரிப்பு நிறுவனத்திற்கு படம் பண்ண ஒப்பந்தமாகியிருந்தார். அமைச்சரானதால் இப்போது அந்த படத்திலிருந்து விலகிவிட்டார்.

பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களின் இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் படம் தான் அவருடைய கடைசி படம் என அறிவித்துவிட்டார். சினிமாவிலிருந்து விலகி முழு நேர அரசியலில் களம் காண இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். தன்னுடைய சொந்த பட நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸின் பொறுப்புகளை கூட வேறு ஒருவரிடம் கொடுக்க இருக்கிறார்.

Also Read: குந்தவை மார்க்கெட்டை சரிக்க பக்கா பிளான் போட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்.. விட்ட இடத்தை பிடிக்க போராடும் த்ரிஷா

இதற்கிடையில் உதயநிதிக்கு கடைசியாக ரிலீசான திரைப்படம் கலகத்தலைவன். மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி, நிதி அகர்வால், ஆரவ் ஆகியோர் இந்த படத்தில் நடித்திருந்தனர். கடந்த 18 ஆம் தேதி ரிலீசான இந்த படம் ஓரளவுக்கு பாசிட்டிவ் ரிவியூக்களை பெற்றது. இந்த படத்தினால் ரொம்ப அடிவாங்கியது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தான்.

இதற்கு காரணம் உதயநிதியின் கலகத்தலைவன் படத்திற்கு அதிகளவு தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டதால், ஐஸ்வர்யா ராஜேஷின் ‘டிரைவர் ஜமுனா’ படத்தை திரையிட முடியவில்லை. அதன் பின்னரும் அந்த படத்தின் ரிலீஸ் பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. எனவே இந்த படம் இந்த ஆண்டு ரிலீஸ் ஆகுமா என்ற பெரிய சந்தேகம் இருந்தது.

Also Read: தாராளமாக கிளாமர் காட்ட களத்தில் இறங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்.. கேட்டவுடன் கிக் ஏத்தும் படத்தின் டைட்டில்

இதற்கிடையில் ‘டிரைவர் ஜமுனா’ திரைப்படம் வரும் டிசம்பர் 30 ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இயக்குநர் கின்ஸ்லின் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் தனிக் கதாநாயகியாக நடித்திருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷின் இந்த படம் மட்டுமல்ல, அவர் நடித்த பல படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கின்றன.

இதனால் அடுத்த வாரமே தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த மூன்று படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக இருக்கின்றன. அவர் நடித்த பர்கானா , கிரேட் இந்தியன் கிட்சன் தமிழ் ரீமேக் படமும் இந்த மாதம் தான் ரிலீஸ் ஆக இருக்கிறது. எனவே ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இது கொஞ்சம் சிக்கலான காலம் தான். பெரிய நடிகர்கள் கூட இப்படி தொடர்ந்து படத்தை ரிலீஸ் பண்ண ரொம்பவே யோசிப்பார்கள்.

Also Read: கதை தான் முக்கியம் என ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 5 படங்கள்.. யாரும் எதிர்பார்க்காத ரோலில் டிரைவர் ஜமுனா

Trending News