வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஐஸ்வர்யா ராஜேஷை கதிகலங்க செய்யும் நடிகை.. சத்தமே இல்லாமல் கைநழுவி போகும் படங்கள்

நல்ல திறமையான நடிகை, குடும்பப்பாங்கான முகம் என்று பிரபலமாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு என்று அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார். ஆரம்ப காலத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த இவர் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சோலோ ஹீரோயின் படங்களை தேர்வு செய்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

இப்படி தன் திறமையால் கஷ்டப்பட்டு தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிய இவர் தற்போது அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி விடுகிறார். படப்பிடிப்பு தளத்தில் கடுமையாக நடந்து கொள்வது, சம்பள விஷயத்தில் கரார் காட்டுவது என்று இவருடைய போக்கு சமீப காலமாக முற்றிலுமாக மாறி இருக்கிறது.

Also read:திருமணமான நடிகருடன் நெருக்கம் காட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. நைட் பார்ட்டியில் அடிக்கும் கூத்து

அதனாலேயே இவரை தங்கள் படங்களில் புக் செய்ய பல தயாரிப்பாளர்களும் தயங்குகின்றனர். அந்த வகையில் தற்போது தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களின் பார்வை ஒரு இளம் நடிகையின் மேல் திரும்பி இருக்கிறது. சின்னத்திரை சீரியல் மூலம் சினிமாவுக்கு வந்த நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது ஏராளமான திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் தற்போது பல வாய்ப்புகளும் அவரை தேடி வந்து கொண்டிருக்கிறது. ஏனென்றால் இவர் சம்பள விஷயத்தில் எப்பவும் எந்தவித பிரச்சனையும் செய்ய மாட்டாராம். அதேபோல ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்தால் ஹீரோயின் என்ற எந்த பந்தாவும் இல்லாமல் அனைவரிடமும் ஒரே மாதிரியாக பழகுவாராம்.

Also read:ரிலீசுக்கு தயாரான ஐஸ்வர்யா ராஜேஷின் 4 படங்கள்.. நயன்தாரா இல்லாத இடத்தை நிரப்புறாங்க போல

மேலும் சூட்டிங் ஸ்பாட்டில் சில விஷயங்களில் அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் இவரை அனைவருக்கும் ரொம்பவே பிடிக்குமாம். இதுபோன்ற பாசிட்டிவ் விஷயங்கள் தான் இவரை தற்போது கமலுடன் இணைந்து இந்தியன் 2 திரைப்படத்தில் நடிக்கும் அளவுக்கு உயர்த்தி இருக்கிறது.

அந்த வகையில் தற்போது பிரியா பவானி சங்கர், ஐஸ்வர்யா ராஜேஷின் இடத்தை அசால்டாக தட்டிப் பறித்துவிட்டார் என்கிறது கோலிவுட் வட்டாரம். அதனால் இனிமேல் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் ப்ரியா பவானி சங்கருக்கு நிச்சயம் ஒரு இடம் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. சத்தமே இல்லாமல் ஐஸ்வர்யா ராஜேஷின் வாய்ப்புகள் எல்லாம் இவர் பக்கம் வந்து குவிகிறது

Also read:ஒன்றரை வருஷமா சைட் அடித்த ப்ரியா பவானி சங்கர்.. கொஞ்சம் கூட மதிக்காத நபர்

Trending News