வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

அடுத்த பயோபிக் படத்திற்கு ரெடியான ரஜினி மகள்.. தோனி பட வெற்றியால் ஐஸ்வர்யாவின் பேராசை

Aishwarya Rajinikanth direct Sourav Ganguly’s biopic: தமிழ் சினிமாவில் விரல் விட்டு  எண்ணும் அளவுக்கு பெண் இயக்குனர்கள் இருந்த போதிலும் அதில் தனித்துவமாக தெரிபவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். சிறிது காலம் சினிமாவை விட்டு விலகி இருந்தவர் சூப்பர் ஸ்டார் சிறப்பு தோற்றத்தில் தோன்ற விஷ்ணு விஷால் மற்றும்  விக்ராந்த் நடிப்பில் வெளியான லால் சலாம் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். 

சமீப காலமாக சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் பொருட்டு தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து வருகிறார் ஐஸ்வர்யா. லால் சலாம் படத்திலும் கிரிக்கெட் அரசியலை மையமாக வைத்து இயக்கிய போதும் பழைய பட கதைகளின் சாயல் தெரியவே கலவையான விமர்சனங்களை பெற்று போதுமான வசூலை எட்ட முடியாமல் திணறியது.

லால்சலாம் தோல்வியின் மூலம் பாடம் கற்றுக் கொண்ட ஐஸ்வர்யா அடுத்ததாக ஒரு பயோபிக் படத்தை இயக்கப் போவதாக தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு இதற்கான அறிவிப்புகள் வெளியான போதும் லால் சலாம் பற்றிய படவேலைகளில் பிஸியாக இருந்ததினால் இதனை துவங்க முடியாமல் போனது.  

Also read: லால் சலாம் படத்தில் இவ்வளவு குறையா?. இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இன்னும் கத்துக்க வேண்டிய விஷயம்

இந்திய கிரிக்கெட் விளையாட்டின் தன்னிகரற்ற தலைவராக இருந்து உலகக்கோப்பையை வென்று இந்தியாவை தலை நிமிரச் செய்த கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்த போது அதில் சுஷாந்த் சிங் சிறப்பாக நடித்திருந்தார். தோனியின் வலிகளுடன் நிறைந்த வாழ்க்கையை வெற்றியாக மாற்றி சிறப்பு செய்ததே Dhoni Untold story ஆனது.

இதேபோன்று இந்திய கிரிக்கெட் அணியினரால் தாதா என்று  செல்லமாக அழைக்கப்பட்ட மேற்கு வங்கத்தின் நட்சத்திர ஆட்டநாயகன் சௌரவ் கங்குலியை பற்றிய கதையை பயோபிக் படமாக எடுக்க உள்ளார் ஐஸ்வர்யா. இதற்காக  கடந்த ஆண்டு கொல்கத்தாவில் நடந்த ஐபிஎல் போட்டிகளின் போது தன் மகன்களுடன் கிரிக்கெட்டை காண சென்றவர் கங்குலியையும் நேரில் சந்தித்து இது பற்றி விவாதித்து வந்துள்ளார்.

உலகெங்கிலும் உள்ள கங்குலியின் ரசிகர்கள் அவரது பயோபிக் படத்தை காண ஆவலாக இருக்கும் நிலையில் இந்த கதாபாத்திரத்திற்கு பாலிவுட் நடிகர்கள் ஹிருத்திக் ரோஷன் முதல் ரன்பீர் கபூர் வரை பல முன்னணி நட்சத்திரங்களும் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இறுதியாக பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானாவை கங்குலியின் கதாபாத்திரத்திற்கு கமிட் செய்து கிரிக்கெட் பயிற்சியும் எடுக்க செய்துள்ளார் ஐஸ்வர்யா. விரைவில்  ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் தரமான சம்பவம் இனிதே துவங்க உள்ளது.

Also read : பணத் திமிரில் கணவர்களை விவாகரத்து செய்த 6 பிரபலங்கள்.. காதல் கணவரை தூக்கி எறிந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

Trending News