Aishwarya Rajinikanth: “வித்தாரக்கள்ளி விறகெடுக்க போனாளாம், கத்தாழ முள்ளு கொத்தோட தச்சுச்சாம்” என்று கிராமப்புறங்களில் ஒரு சொலவடை சொல்லுவார்கள். அதற்கு அர்த்தம், வேலை செய்யத் தெரியாதவர்களுக்கு ஏதாவது ஒரு வேலையை கொடுக்கும் பொழுது அதை சரியாக செய்து முடிக்காமல், அந்த வேலை சரியில்லை என்று ஆயிரம் காரணம் சொல்லுவார்கள். அப்படித்தான் இப்போது லால் சலாம் படம் தோல்வி அடைந்ததற்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சொன்ன காரணம் இருக்கிறது.
சூப்பர் ஸ்டாரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவாக இருக்கட்டும், இளைய மகள் சௌந்தர்யாவாக இருக்கட்டும் இவர்கள் மீது ரஜினியின் ரசிகர்களுக்கு அவ்வளவாக பற்றுதல் இல்லாமல் போனதற்கு அந்த இரண்டு பெண்கள் தான் காரணம். அப்பா, அப்பா என்று சொல்லிக் கொண்டே தலைவரை எந்த லெவலுக்கு கூட்டிக் கொண்டு வந்து அசிங்கப்படுத்த முடியுமோ அதை பக்காவாக செய்து முடித்து விடுவார்கள். ரஜினி நடிக்கும் படங்களில் இந்த பெண்களின் பங்கு இருக்கிறது என்று தெரிந்தாலே ரஜினி ரசிகர்களுக்கு அல்லு விட்டு போய்விடும்.
ஏதாவது ஒரு இடத்தில் சறுக்கி விழுந்தால் பரவாயில்லை, ஆனால் ரஜினியின் மகள்கள் இருவருமே எடுத்து வைக்கும் ஸ்டெப் மொத்தமும் தொடர்ந்து சறுக்கிக் கொண்டுதான் வருகிறது. பெண்களை எப்படியாவது முன்னேற்றி விட வேண்டும் என தலைவரும் படாத பாடு பட்டு வருகிறார். காதல் கணவரை பிரிந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நான் அடுத்த படம் பண்ணுகிறேன் என்று சொன்னதும் மகளுக்காக படத்தின் மொத்த கதையையும் தோள் மீது தாங்கி நடித்துக் கொடுத்தார்.
Also Read:90களில் சூப்பர் ஸ்டாரை வெறுத்த சக நடிகர்கள்.. ரஜினி போன் பண்ணியும் எடுக்காமல் செய்த துரோகம்
ஜெயிலர் படத்தின் மூலம் ரஜினி வாங்கி வைத்திருந்த மொத்த பெயரையும் அடித்து தூக்கி விட்டது லால் சலாம் படம். தியேட்டர்களில் ஈ ஓடியது மட்டுமில்லாமல், கோடிக்கணக்கில் வந்து கொண்டிருந்த வசூல் இரண்டே நாளில் இலட்சக்கணக்குக்கு இறங்கியது. ஏற்கனவே படத்தை பார்த்தவர்கள் எல்லாம் பார்க்காதவர்களிடம் தயவு செய்து அந்த படத்திற்கு மட்டும் போகாதீங்க என்று ஃப்ரீ அட்வைஸ் கொடுக்க ஆரம்பித்தார்கள். இளம் ஹீரோ மணிகண்டன் நடித்த லவ்வர் படம் வசூலை வாரி குவித்தது.
கூச்சமே இல்லாமல் பழி போடும் ஐஸ்வர்யா
ரஜினி பொண்ணுக்கு படம் எடுக்கவே தெரியல என பார்த்தவர்கள் எல்லாம் புலம்பிக்கொண்டிருக்கும்போது, நேக்காக அந்த பழியை தூக்கி லைக்கா ப்ரொடெக்ஷன் தமிழ் குமரன் மீது சுமத்திவிட்டார் ஐஸ். அதாவது தமிழ்குமரன் சரியாக விளம்பரப்படுத்தவில்லை என்பதால் தான் லால் சலாம் வெற்றி பெறவில்லையாம். ஒரு நல்ல படத்திற்கு விளம்பரம் தேவையில்லை என்று இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது என்று தெரியவில்லை.
அப்பா பெயரை வைத்து நாங்க வேலை செய்ய விரும்பலை என்று மேடையில் ஏறி அறைகூவல் போட்டாலும், 70 வயதை தாண்டிய அப்பாவின் முதுகில் தான் இன்று வரை சவாரி செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு வேளை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இப்படித்தான் படம் எடுப்பார் என்று தெரிந்துதான் தனுஷ் இந்த படத்திற்கு வஞ்சப்புகழ்ச்சி மாதிரி தொடர்ந்து வாழ்த்துக்கள் சொல்லி வந்தாரா என இப்போது லேசாக சந்தேகம் வருகிறது.
Also Read:வேட்டையனில் ரெண்டு விஷயங்களை தோலுரித்த ரஜினி.. 15 நாளில் பூசணிக்காய் உடைக்கும் சூப்பர் ஸ்டார்