திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

கனிமொழி பற்றி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சொன்ன சீக்ரட்.. என்னவா இருக்கும்?

இயக்குனரும் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது நீண்ட நாள் தோழியை பற்றி தற்போது பேசிய விஷயம் வைரலாகி வருகிறது. சமீபத்தில், இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், மற்றும் எம்.பி கனிமொழி இருவரும் சேர்ந்து ஒரு பேட்டி அளித்திருந்தனர். அந்த பேட்டியில் அவர்கள் நட்பை பற்றி ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கூறியிருந்தார்.

இருவரும் சிறுவயது முதலே தோழிகளாக இருந்துள்ளனர். இவர்களுக்குள் உள்ள உறவு மிகவும் ஆழமானது என்றும் கூறியிருக்கிறார். இவர்கள் நட்பை பற்றி ஐஸ்வர்யா கூறியதாவது, “நாங்கள் இருவரும் 20 வருடத்துக்கு மேல் நண்பர்களாக இருக்கிறோம். எப்போது நட்பு துவங்கியது, எப்போது வளர்ந்தது என்று ஒன்றுமே ஞாபகம் இல்லை. “

“எப்போதாவது நான் தனிமையாக உணர்ந்தாள் நான் முதலில் கனிமொழி அக்காவுக்கு தான் கால் செய்வேன். பேச யாருமில்லை என்றால், நான் இருக்கிறேன் என்று முதல் ஆளாக எனக்காக அவர் வந்து நிற்பார். நாங்கள் குடும்ப உறுப்பினர்களை போல.. எந்த ஒளிவு மறைவும் கிடையாது. “

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சொன்ன Secret

“அவர் பிறப்பிலே ஒரு அரசியல்வாதி தான். அரசியல் தான் அவருக்கு எல்லாம். அவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. இருப்பினும் என் கோவில் வழிகாட்டி அவர் தான். நான் ஏதாவது கோவில் செல்லவேண்டும் என்றால் முதலில் கனிமொழி அக்காவிடம் தான் கூறுவேன்..”

“உடனே அவர் ஆட்களை அனுப்பிவிடுவார். அவர்கள் தான் என்னை பத்திரமாக அழைத்து சென்று வருவார்கள். மேலும் எனக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருவார்.” என்று கூறியிருக்கிறார். தற்போது இதை நெட்டிசன்கள் விமர்சித்தும் வருகின்றனர்.

“எக்கோவ்.. உங்களுக்கே தெரியாம கனிமொழி அக்கா பூஜை போடுவார். உங்களுக்கு பாவம் தெரியவில்லை..” என்று ஒரு சிலர் நக்கல் செய்து வருகின்றனர். மேலும் பலர் இவர்களுக்குள் இப்படி ஒரு நட்பு இருக்கிறதா என்று ஆச்சரியமாகவும் பார்த்து வருகின்றனர்

Trending News