செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

கெஸ்ட் ரோலுக்கு ரஜினியை டார்ச்சர் பண்ணும் ஐஸ்வர்யா.. லால் சலாம் படத்திற்காக கத்துக்கிட்ட விஷயங்கள்

Rajini in Lal Salaam: இந்த ஆண்டு ரஜினிக்கான வருஷம் என்கிற மாதிரி வசூல் ரீதியாக ஜெயிலர் படத்தில் மாஸ் காட்டிவிட்டார். அந்த வகையில் இன்னும் அதிகமான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து இவருடைய அடுத்த படத்திற்கு எதிர்பார்ப்புகளை வைத்து காத்திருக்கும் படி செய்திருக்கிறார். தற்போது ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் ராஜா இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார்.

இதற்கிடையில் ஜெயிலர் படத்தில் நடித்துக் கொண்டு இருக்கும் பொழுதே ரஜினி அவருடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் படத்தில் கேமியோ தோற்றமான மொகைதீன் பாய் கேரக்டரில் கமிட்டானார். இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முன்னணி ஹீரோவாக நடித்திருந்தாலும் இப்படம் முழுக்க முழுக்க ரஜினி படமாகவே ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள்.

அந்த வகையில் ரஜினி, ரசிகர்களை ஏமாற்றி விடக்கூடாது என்ற விஷயத்தில் ரொம்பவே முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதாவது ரஜினி இப்படத்தில் முஸ்லிம் கேரக்டர் என்பதால் அதில் எந்தவித தவறும் நடந்து விடக்கூடாது என்பதற்காக முஸ்லிம் நண்பர்களிடம் எப்படி தொழுகை செய்ய வேண்டும். எந்த நேரத்தில் மாஷா அல்லாஹ், இன்ஷா அல்லா சொல்ல வேண்டும்.

Also read: வசூல் ரீதியாக நான் தான் No.1 என நிரூபித்த ரஜினியின் 5 படங்கள்.. மூணு தலைமுறைனா சும்மாவா!

எப்படி முழுமையான முஸ்லிமாக நடந்து கொள்ள வேண்டும், எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்பதை ஒவ்வொரு விஷயங்களாக நுணுக்கமாக கேட்டு தெரிந்த பின்பே மொகைதீன் பாய் கதாபாத்திரத்தில் நடித்துக் கொடுத்திருக்கிறார். அதற்காக ரஜினிக்கு தெரிந்த பிரெண்ட்ஸ் மற்றும் முஸ்லிம் வேலை ஆட்களிடம் இந்த மாதிரி விஷயங்கள் அனைத்தையும் கற்றுத் தெரிந்திருக்கிறார்.

சும்மா சாதாரணமான கெஸ்ட் ரோல் தானே என்று கொஞ்சம் கூட யோசிக்காமல், தனக்கான கதாபாத்திரத்தை சரியாக நடித்துக் கொடுக்க வேண்டும். அத்துடன் ரசிகர்கள் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை வீணடிக்க கூடாது என்பதிலும் மிகக் கவனமாக இருந்து செயல்பட்டு இருக்கிறார். போதாக்குறைக்கு இவருடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், லால் சலாம் படத்தின் மொத்த கதையும் தூக்கி நிறுத்தப் போவது அப்பா ரஜினி தான்.

அதனால் தயவு தாட்சியமே பார்க்காமல் இந்த கேரக்டர்க்காக ரஜினியை படாதபாடு படுத்தி எடுத்து இருக்கிறார். அப்பா எட்டடி பாஞ்சா பிள்ளை 16 அடி பாயும் என்று சொல்வார்கள், அதை நிரூபித்துக் காட்டும் விதமாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் படம் வெற்றி அடையுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.  இப்படத்தின் ஆடியோ லான்ச் வருகிற 21ஆம் தேதி சென்னையில் உள்ள பிரபல கல்லூரியான சாய்ராம் கல்லூரியில் நடைபெற போகிறது. மேலும் இப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் பண்ணுவதற்கு திட்டமிட்டு இருக்கிறார்கள்.

Also read: நான் நினைச்சா மட்டும் தான் நீ ஜெயிக்க முடியும்.. நட்டாற்றில் நிற்கும் ரஜினியின் வாரிசு

Trending News