உண்மையை மறைக்கும் தனம், மீனா.. செண்டிமெண்ட் சீனயை வைத்து உருட்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

Pandian Stores Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இறுதி கட்டத்தை அடையப் போகிறது. அதற்காக கடைசியில் ஏதாவது ஒரு சென்டிமென்ட் சீனை வைத்து முடிப்பதற்காக இந்த குடும்பத்தின் பில்லர் ஆக இருக்கும் தனத்தை வைத்து காய் நகர்த்தி வருகிறார்கள். அதாவது அடிக்கடி இவருக்கு நெஞ்சு வலி வருவதும், அதை பொருட்படுத்தாமல் விட்டு தற்போது அவருக்கு கேன்சர் வந்திருக்கு என்று மருத்துவர் சொல்லிவிடுகிறார்.

இதைக் கேட்டதும் தனம் ரொம்பவே பயத்தில் புலம்பித் தவிக்கிறார். இந்த உண்மை மீனாக்கு மட்டும் தெரிந்த நிலையில் ஆறுதலாக பேசுகிறார். அதெல்லாம் ஒன்னும் ஆகாது அக்கா, எல்லாம் சரியாகிவிடும் இந்த உண்மையை நம் குடும்பத்தில் உள்ளவரிடம் மறைக்க வேண்டாம் சொல்லிவிடலாம் என்று சொல்கிறார்.

Also read: ஆண் தோற்றால் அனுபவம் பெண் தோற்றால் அவமானம்.. குணசேகரனிடம் கேவலமாக தோற்றுப் போன ஜனனி

ஆனால் தனம் இப்பம் எதுவுமே சொல்ல வேண்டாம் மற்றவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது என்று சொல்கிறார். இதற்கிடையில் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட மீனா ரொம்பவே மனதளவில் உடைந்து விடுகிறார். ஆனாலும் மீனா மற்றும் தனத்தின் நடவடிக்கைகளை கவனித்த குடும்பத்தினருக்கு ஏதோ ஒரு சந்தேகம் எழுப்புகிறது.

இந்த மீனா அட்லீஸ்ட் ஜீவா விடமாவது உண்மையை சொல்லி இருக்கலாம். கடைசியில் தனத்திற்கு குழந்தை பிறக்கும் போது அவருடைய நெஞ்சுவலி பிரச்சனை சரியாகி அனைவரும் சந்தோஷமாக இருப்பதை போல் தான் இந்த நாடகத்திற்கு சுபம் என்று போடுவார்கள். ஆனால் அதற்குள் ஒரு அழுகாச்சி சீனை கொண்டு வந்து பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்க்கிறார்கள்.

Also read: எந்த நாய்க்கும் பதில் சொல்ல தேவையில்லை.. ஆவேசமாக பொங்கி எழும் குணசேகரன்

இதற்கிடையில் ஐஸ்வர்யா ரொம்ப நல்லவள் மாதிரி ஸ்கோர் பண்ண நினைக்கிறார். அங்கு இருக்கிற மீனா அக்காக்கு போன் பண்ணி உதவிக்கு கூப்பிடுறீங்க. இந்த வீட்டில் நான் உங்க கூட சும்மா தானே இருந்துகிட்டு இருக்கேன் என்ன கூட்டிட்டு போகலாம் என்று தனத்திடம் சொல்கிறார். பொதுவாக சொல்லுவாங்களே ஆமை புகுந்த வீடு உருப்படாது என்று.

அது இந்த ஐஸ்வர்யா விஷயத்தில் கரெக்டாக தான் இருக்கிறது. கண்ணனை தனி குடித்தனம் கூட்டிட்டு போய் ஒரு வழிப்படுத்தியாச்சு. பிறகு இங்க வந்து கொஞ்ச நாளிலேயே கண்ணன் லஞ்சம் வாங்குற அளவுக்கு போய்ட்டான். இப்பொழுது தனத்துக்கு ஒரு பிரச்சனை இதுல வேற போற இடத்துக்கு இந்த ஐஸ்வர்யாவை கூட்டிட்டு போகணுமா? என்னென்ன எல்லாம் கம்பி கட்டுற வேலையெல்லாம் பாக்குறாங்க பாரு.

Also read: குணசேகரனால் கதிகலங்கி போய் நிற்கும் ஆதிரை.. எதிர்பார்க்காத ட்விஸ்ட் உடன் எதிர்நீச்சல்