வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

முன்னாள் காதலர் கொடுத்த டார்ச்சர்.. அவசர அவசரமாக அபிஷேக் பச்சனை பிடித்த ஐஸ்வர்யா ராய்

உலக அழகி ஐஸ்வர்யா ராய் பற்றிய யாருக்கும் தெரியாத ரகசியங்கள் கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. அதில் ஐஸ்வர்யா ராயை கிட்டத்தட்ட மூன்று நடிகர்களுக்கு மேல் காதலித்துள்ளனர் என்ற விஷயமும் வெளிவந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் தயாரிப்பாளர் ஒருவருடனும் காதல் கிசுகிசுவில் இருந்துள்ளார் அழகி ஐஸ்வர்யா ராய். இப்படி பல காதலில் இருந்த ஐஸ்வர்யா ராய் திடீரென அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டது ஏன்? என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது.

ஐஸ்வர்யா ராய் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களான ராஜீவ் முல்சந்தினி, விவேக் ஓபராய் மற்றும் சல்மான் கான் ஆகிய நடிகர்களுடன் காதலில் இருந்துள்ளார். அதில் கடைசியாக சல்மான்கானுடன் இருந்த போது இருவரும் அன்யோனியமாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

அதன் பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படவே சிலகாலம் பிரிந்து சினிமாவில் தனிப்பட்ட முறையில் இருந்துள்ளனர். அந்த கால கட்டங்களில் சல்மான் கான் ஐஸ்வர்யா ராயை அவருடைய ரகசிய புகைப்படங்களை காட்டி மிரட்டி வந்ததாக தெரிகிறது.

இதனால் உஷாரான ஐஸ்வர்யா ராய் சல்மான்கானை விட மிகப் பெரிய குடும்பத்தில் இருந்தால்தான் இதிலிருந்து தப்பிக்க முடியும் என கருதி அவசரஅவசரமாக அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டாராம்.

இல்லையென்றால் இன்னும் பல வருடங்கள் திருமணம் செய்யாமல் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்திருப்பார் எனவும், சல்மான் கானின் டார்ச்சரால் தான் தன்னுடைய கேரியரையும் பொருட்படுத்தாது திருமணத்திற்கு ஓகே சொன்னதாகவும் பாலிவுட் பத்திரிக்கைகளில் பரபரப்பாக எழுதப்பட்டு வருகிறது. ஐஸ்வர்யா ராய் தற்போது மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து அடுத்ததாக தமிழில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்.

aiswarya-rai-salman-khan-cinemapettai
aiswarya-rai-salman-khan-cinemapettai

Trending News