ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபகாலமாக தன்னுடைய சம்பளத்தை பல மடங்கு உயர்த்துவதில் ஆர்வம் காட்டி வருவதாக தயாரிப்பாளர்கள் அவர் மீது அப்செட்டில் இருந்து வருகின்றனர். தற்போது இந்த செய்திதான் கோலிவுட் ஹாட் டாப்பிக்.
காக்கா முட்டை படத்தின் மூலம் பிரபலமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். ஆரம்பத்திலிருந்தே கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்களில் நடித்து வந்ததால் தற்போது கதையின் நாயகியாக பல படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்களில் நடிக்க முதல் சாய்ஸாக தயாரிப்பாளர்கள் யோசிப்பது ஐஸ்வர்யா ராஜேசை தான். தமிழில் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி முதன்முதலில் சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த கணவர் பெயர் ரணசிங்கம் தான்.
இந்த படத்தில் விஜய்சேதுபதி நடித்திருந்தாலும் ஐஸ்வர்யா ராஜேஷ் தான் முதன்மை கதாபாத்திரமாக இருந்தார். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த பல படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய சம்பளத்தை இரண்டு மடங்கு உயர்த்தி விட்டாராம்.
இதனால் படத்தின் பட்ஜெட்டை விட ஐஸ்வர்யா ராஜேஷின் சம்பளம் அதிகமாக இருப்பதாக குற்றம்சாட்டி வருகின்றனர் தயாரிப்பாளர்கள். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, என்னுடைய படங்கள் தொடர்ந்து வெற்றி பெறுவதால் சம்பளத்தை உயர்த்தி உள்ளேன் என கூறுகிறாராம்.
ஆனால் நல்ல கதை கிடைத்தால் கண்டிப்பாக சம்பளத்தை விட்டுக் கொடுத்து நடிக்கவும் தயாராக இருக்கிறேன் எனக் கூறி தயாரிப்பாளர்களை சமாதானப்படுத்தியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
