கதாநாயகியாக மையப்படுத்தி வரும் கதைகளில் தற்போது முக்கியச் சாயிசாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வந்த கனா படம் இவரை வேறொரு தளத்துக்கு அழைத்துச் சென்றது.
தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கி, தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

ஏனென்றால் கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி, அம்மா, தங்கச்சி என அனைத்து கதாபாத்திரத்திலும் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் ஐஸ்வர்யா.

ஆரம்பத்தில் இவரது படங்கள் கலவையான விமர்சனத்தை பெற்றாலும், சமீபகாலமாக இவர் தேர்ந்தெடுக்கும் நடிக்கும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதனால் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு விதவிதமான கேரக்டர்களை கொடுத்து தங்களது படத்தில் நடிக்க வைக்க பல இயக்குனர்கள் வரிசைகட்டி நிற்கின்றனர்.
தற்போது தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகளைப் பெற்று வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் அங்குள்ள கலாச்சாரத்திற்கு ஏற்றபடி கவர்ச்சியில் குதித்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.