திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

காசுக்காக சீப்பான வேலையை பார்த்த ஐஸ்வர்யா ராஜேஷ்.. வாயில் வயிற்றில் அடித்துக் கொள்ளும் தயாரிப்பாளர்

ஐஸ்வர்யா ராஜேஷ் சமீப காலமாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த டிரைவர் ஜமுனா படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. எதிர்பார்த்த அளவில் இந்தப் படம் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை.

இதனை அடுத்து இப்பொழுது தீ கிரேட் இந்தியன் கிச்சன் படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தை ஆர் கண்ணன் இயக்கியுள்ளார். இந்தப் படம் ஏற்கனவே மலையாத்தில் வெளிவந்துள்ளது, அதை இப்பொழுது தமிழில் ரீமேக் செய்யபட்டு ஐஸ்வர்யா ராஜேஷ், ராகுல் ரவிந்தர் மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

Also read: கேரியரின் உச்சத்தில் இருக்கும் 2 நடிகைகள்.. விஜய் சேதுபதிக்கே டஃப் கொடுக்கும் ஹீரோயின்ஸ்

இந்த படம் மலையாளத்தில் பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து தமிழிலும் இதன் எதிர்பார்ப்பு பெரிய அளவில் ஏற்படுத்தி வருகிறது. இந்த படத்தின் பிரமோஷனுக்காக படக்குழுவினர், ஐஸ்வர்யா ராஜேஷை அழைத்தனர். ஆனால் அவர் வர முடியாது என்று சொல்லிவிட்டார். ஏனென்றால் அவருக்கு கொடுக்க வேண்டிய காசு கொடுக்காமல் இருந்தது தான்.

ஆனால் படக்குழுவினர் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு 20 நாள் கால்ஷீட் கொடுத்திருந்தார்கள். ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷ் 12 நாட்களிலே அவரது போர்ஷனை முடித்து விட்டாராம். ஆனாலும் அவருக்கு கொடுக்க வேண்டிய முழு சம்பளத்தையும் பேசுனப்படியே கொடுத்து விட்டார்களாம்.

Also read: இஷ்டத்திற்கு சம்பளத்தை ஏற்றிய ஐஸ்வர்யா ராஜேஷ்.. அதிர்ச்சியில் தயாரிப்பாளர்கள்

இருந்தாலும் அந்த டிடிஎஸ் எனப்படும் வரி கட்டணத்தை கட்டவில்லை என்பதற்காக ப்ரொமோஷனுக்கு வர மறுத்துள்ளார். அதன் பின் இந்த பணத்தை எல்லாம் கட்டிய பிறகு வந்துள்ளார். பெயருக்கு தான் ஹீரோயின் மற்றபடி காசு விஷயத்துல ரொம்ப மோசமா நடந்து இருக்கிறாங்க என்று படக்குழுவில் பேசப்பட்டு வருகிறார்கள்.

சமீபத்தில் இவருக்கு வெளிவந்த படங்கள் எல்லாமே வெற்றி படமாக அமையவில்லை என்றாலும் இவர் செய்கிற அலப்பறைகள் தாங்க முடியவில்லை என்று ஷூட்டிங் ஸ்பாட்டில் பேசிக் கொள்கிறார்கள். அந்த அளவுக்கு இவர் காசு விஷயத்துல ரொம்ப கவனமாக இருந்து வருகிறார்.

Also read: இதுவரை இல்லாத கவர்ச்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ்.. புகைப்படத்தை பார்த்து ஆட்டம் கண்ட இணையதளம்

Trending News