வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

வெறும் 20 நிமிட காட்சிக்கு கோடிக்கணக்கில் சம்பளமா? அதிர்ச்சி அளிக்கும் ஆர்ஆர்ஆர் பட சம்பள விவரங்கள்

தெலுங்கு இயக்குனர் ராஜமெளலி இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ஆர்ஆர்ஆர் படத்திற்கு தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது. தெலுங்கில் பிரபலமான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகிய இருவர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது.

படம் ஜனவரி 7ஆம் தேதி வெளியாகி இருக்க வேண்டியது. ஆனால் கொரோனா ஊரடங்கு மற்றும் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் படத்தின் வெளியீட்டை படக்குழுவினர் தள்ளி வைத்துள்ளனர். இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஆர்ஆர்ஆர் படமும் ராஜமெளலியின் முந்தைய படமான பாகுபலியை போல பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் என்பது தெரிந்த ஒன்றுதான்.

ஆனால் இவ்வளவு பிரம்மாண்டமா என வாயை பிளக்கும் அளவிற்கு சில தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி ஆர்ஆர்ஆர் படத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் தவிர பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் நடிகை ஆலியா பட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கிட்டத்தட்ட இவர்கள் இருவரும் கெஸ்ட் ரோல் தான் செய்துள்ளார்கள் என கூறப்படுகிறது. ஆனால் அதற்காக நடிகர் அஜய் தேவ்கனுக்கு சம்பளமாக 35 கோடி ரூபாயும், நடிகை ஆலியா பட்டுக்கு 9 கோடி ரூபாயும் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில ஆச்சர்யம் கொடுமை என்னவெனில் படத்தில் ஆலியா பட் வெறும் 20 நிமிடங்கள் தான் வருவாராம்.

இதற்கா இவ்வளவு சம்பளம் என கேட்க தோன்றுகிறது அல்லவா? இதே கேள்வி தான் அனைவருக்கும் உள்ளது. இவர்கள் இருவரின் காட்சிகள் குறைவு என்றாலும் இருவருக்கும் வலுவான கேரக்டராம். அதே சமயம் ஹிந்தி மார்க்கெட்டிற்கு இருவரும் தேவை என்பதால் இவ்வளவு பெரிய தொகை சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

என்ன இருந்தாலும் இது மிகப்பெரிய தொகை தான். ஆனால் இந்த தொகையை ஆர்ஆர்ஆர் படம் ஒரே நாளில் வசூல் செய்து லாபம் ஈட்டி தந்துவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனெனில் அனைத்து மொழிகளிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு நிலவி வருகிறது. அதுவும் தமிழில் ஆர்ஆர்ஆர் படத்தின் தியேட்டர் உரிமை நல்ல விலைக்கு போயுள்ளதாக கூறப்படுகிறது.

Trending News