திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சொதப்பலில் லோகேஷின் சூப்பர் ஹிட் படம்.. எல்லாத்தையும் மாற்றி சோலிய முடிக்க போகும் இயக்குனர்

லோகேஷ் கனகராஜ் இயக்குனர் மற்றும் திரைக்கதை ஆசிரியராக கோலிவுட்டில் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார். 2016 ஆம் ஆண்டு களம் படத்தின் மூலம் இயக்குனராகிய இவர் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து சென்சேஷனல் இயக்குனர் ஆகிவிட்டார்.

சமீபத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடித்து, இவர் இயக்கிய விக்ரம் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த படத்தினால் ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே தமிழ் சினிமாவை திரும்பி பார்த்தது. மொத்த திரையுலகமும் இவரை பார்த்து சற்று அரண்டு போய் தான் இருக்கிறது.

Also Read: தளபதி-67 படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜின் ஹீரோ இவர்தான்.. வலையில் சிக்கிய சுறா!

லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு ரிலீசான திரைப்படம் கைதி. கார்த்தி, நரேன், அர்ஜுன் தாஸ் ஆகியோர் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர். இந்த படம் அந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட் ஆனது. கதாநாயகி, டூயட், இரட்டை அர்த்த காமெடிகள் என எதுவும் இல்லாமல், கதாநாயகன் மற்றும் ஒரு குற்றத்தின் விளைவு என்பதை கொஞ்சம் எமோஷனலாக கூறியிருந்தார் லோகேஷ்.

இந்த படம் இப்போது ‘போலோ’ என்னும் பெயரில் ஹிந்தி மொழியில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த படத்தில் அஜய் தேவ்கன் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் தபு நடிக்க இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகி இருந்த நிலையில் தற்போது அமலாபால் இரண்டாவது ஹீரோயின் என அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியிருக்கின்றன.

Also Read: கைதி படத்தினால் கார்த்திக்கு வந்த ஆப்பு.. குடும்பத்தில் குட்டைய கிளப்பிய மனைவி

இந்த படத்தை முதலில் தர்மேந்திரா ஷர்மா இயக்குவதாக இருந்த நிலையில் அஜய் தேவ்கன் தான் இந்த படத்தை இயக்குகிறார். எப்போதுமே ரீமேக் படங்களில் அந்தந்த மொழிகளுக்கு ஏற்ப சின்ன மாறுதல்கள் செய்வார்கள். கைதி படத்திலும் இது போன்ற மாறுதல் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இப்படி ஒரு மாறுதலை யாருமே எதிர்பார்க்கவில்லை. கதாநாயகியே இல்லாமல் விறுவிறுப்பான கதைக்களத்தை கொண்ட கைதி படக் கதையின் ஹிந்தி ரீமேக்கில் அமலா பால் மற்றும் தபு என இரண்டு ஹீரோயின்களை போட்டு மொத்தமாக கதையை சொதப்பி கொண்டிருக்கிறார் அஜய் தேவ்கன்.

Also Read: தமிழ் சினிமாவை உற்று பார்க்க வைத்த 2 படங்கள்.. பொறாமையில் KGF, சீதாராமை வைத்து பண்ணும் அரசியல்

Trending News