வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

உதயநிதி, லலித் சொல்லியும் அடங்காத அஜய் ஞானமுத்து.. மொத்தத்தில் அசிங்கப்பட்ட விக்ரம்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படம் நேற்று பெரும் ஆரவாரத்துடன் வெளியானது. கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக கஷ்டப்பட்டு எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் சில நெகட்டிவ் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.

அதாவது படத்தின் நீளம் அதிகமாக இருக்கிறது என்றும், சில காட்சிகள் நெருடலாக இருக்கிறது என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். அந்த வகையில் விக்ரம் மிகவும் கஷ்டப்பட்டு நடித்திருந்த இந்த திரைப்படத்தை தான் பெரிதும் நம்பி இருந்தார். ஏனென்றால் அவரின் நடிப்பில் கடைசியாக வெளியான மகான் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

Also read : தோல்வியை ஒப்புக் கொண்ட கோப்ரா படக்குழு.. முன்னாடியே இத பண்ணியிருந்தா தல தப்பி இருக்கும்

அதனால் இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படத்திற்கு வரும் சில விமர்சனங்கள் விக்ரமை ரொம்பவும் அப்செட் ஆக்கிவிட்டதாம். இதற்கு முழு காரணமும் இயக்குனர் அஜய் ஞானமுத்து தான் என்று கூறுகின்றனர்.

ஏனென்றால் அவர் இந்தப் பட தயாரிப்பாளரான லலித் மற்றும் வெளியீட்டு உரிமையை பெற்றிருக்கும் உதயநிதி இருவரிடமும் படம் ரிலீஸ் ஆவதற்கு முந்திய நாள் இரவு 10 மணிக்கு தான் போட்டு காட்டினாராம். அப்போதே படத்தை பார்த்த இருவருக்கும் திருப்தி இல்லையாம்.

Also read : கோப்ரா பட தோல்வியை அன்றே கணித்த விஜய்.. பாம்பு ரொம்ப நேரம் படம் எடுத்தா கீறி கிட்ட தோத்து போகும்

மேலும் உதயநிதி இயக்குனரிடம் படத்தின் முதல் மற்றும் கடைசி காட்சிகளின் 15 நிமிடங்களை நீக்கி விடுங்கள் என்று கூறியிருக்கிறார் அதேபோன்று தயாரிப்பாளரும் 30 நிமிட காட்சிகளை வெட்டி விடலாம் என்று அறிவுறுத்தி இருக்கிறார்.

ஆனால் இயக்குனர் அவர்கள் இருவரின் பேச்சையும் கேட்கவில்லை. இது போன்று அவர்கள் ஏதாவது குறை சொல்வார்கள் என்று தெரிந்துதான் படத்தை ரிலீசுக்கு முந்திய நாள் போட்டுக் காட்டி இருக்கிறார். ஒருவேளை அவர்கள் கூறுவதை கேட்டிருந்தால் படத்திற்கு இது போன்ற விமர்சனங்கள் வந்திருக்காது. ஆக மொத்தத்தில் இயக்குனரின் இந்த பிடிவாதத்தால் விக்ரம் தான் படங்கள் ஓடாமல் அசிங்கப்பட்டு வருகிறார்.

Also read : நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டி கோப்ரா செய்த முதல் நாள் வசூல்.. இத்தனை கோடியா?

Trending News