தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தல அஜித் பிரபல தயாரிப்பாளர் ஒருவரிடம் 6 லட்சம் பணம் வாங்கி ஏமாற்றி விட்டதாக பிரபல தயாரிப்பாளர் கூறிய செய்தி தான் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தல அஜித் பற்றி பலரும் நல்ல விதமாக கூறி கொண்டிருக்கிறோம். மேலும் தல அஜித் போல் ஒரு ஜென்டில்மேன் தமிழ் சினிமாவில் இல்லை என்பது போல பலரும் சிலாகித்து கூறியுள்ளனர். உடன் நடித்த நடிகர்கள், அஜித் வீட்டில் வேலை செய்யும் தொழிலாளிகள் என அனைவரும் தல அஜித்தின் பண்பைப் பற்றிப் பெருமையாக கூறினர்.
ஆனால் ஒரே பேட்டியில் தல அஜித் மானத்தை கப்பல் ஏற்றிவிட்டார் பிரபல தயாரிப்பாளர் செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணன். தற்போது அவருக்கு எதிராக பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் குற்றசாட்டு வைத்தாலும் பரவாயில்லை, ஆனால் அஜித்தை அவன் இவன் என்று ஒருமையில் பேசியது பலருக்கும் பிடிக்கவில்லை.
இப்படி அஜித் மீது இவர் குற்றம் சாட்டி இருக்கும் நிலையில், தல அஜித் தன்னுடைய நண்பர் படம் ஒன்றிற்காக சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுப்பதாக பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளது தல அஜித் எப்படிப்பட்டவர் என்ற குழப்பத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
தல அஜித் ஷாலினி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் அமர்க்களம். 1999ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை அஜித்தின் நெருங்கிய நண்பர் சரண் இயக்கினார். அப்போது தல அஜீத்துக்கு கொடுக்கப்பட்ட அட்வான்ஸ் செக்கை தற்போது வரை தல அஜித் டெபாசிட் செய்யாமல் வைத்துள்ளாராம்.
ஏன் என்று கேட்டதற்கு, காதல் மன்னன் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னர் தயாரிப்பாளர் பல நஷ்டங்களை சந்தித்ததால் அமர்க்களம் பட வெற்றியை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன் எனவும், அதில் எனக்கு பத்து பைசா கூட வேண்டாம் எனவும் அந்த செக்கை வாங்கி வைத்துக் கொண்டாராம். இதனை தல அஜித்தின் நெருங்கிய நண்பரும் அமர்க்களம் படத்தின் இயக்குனருமான சரண் குறிப்பிட்டுள்ளார்.