55 நாட்கள் இரவு பகலாக நடைபெறும் படப்பிடிப்பு.. AK 61 படத்திற்கு வந்த சோதனை!

ak61-cinemapettai
ak61-cinemapettai

இந்த ஆண்டு பிப்ரவரியில் ரிலீசான தல அஜித்தின் வலிமை படக்குழுவோடு மீண்டும் அஜித் தனது 61-வது படத்தில் இணைந்திருக்கிறார். போனி கபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக துவங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பொதுவாக அஜித் படங்கள் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெறுவதுதான் வழக்கம். அப்படித்தான் இதுவரை அஜித் நடிப்பில் வெளியான வீரம், வேதாளம், விஸ்வரூபம், நேர்கொண்ட பார்வை என பல படங்கள் அங்கு தான் படமாக்கப்பட்டது.

ஆனால் இப்பொழுது ரமோஜி ராவ் பிலிம் சிட்டியில் ஓவர் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கேமரா கூட பயன்படுத்தாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் அங்கு ஷூட்டிங் நடத்த முடியாத அளவுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை பார்த்த படக்குழுவினர் சூட்டிங்கை வேறு ஒரு இடத்திற்கு மாற்றி விட்டனர்.

AK 61படத்திற்கான படப்பிடிப்பு தாமதம் ஆகாமல் வேறொரு இடத்தில் படத்திற்கு தேவையான செட் அமைக்கப்பட்டு படமாக்குகின்றனர். தற்போது படத்திற்கான 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இன்னும் 10 நாட்களுக்கு மட்டுமே படப்பிடிப்பு இருப்பதால் அதை விறுவிறுப்பாக நடத்தி முடித்து வருகின்ற தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு செயல்படுகிறது.

இந்தப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக அசுரன் படத்தில் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த மஞ்சுவாரியர் நடிக்கிறார். இவர்களுடன் ஜான் கோக்கன், நடிகர் வீரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு வீரா என படத்திற்கு டைட்டில் வைத்ததாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளிவராத நிலையில் இப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதில் நீண்ட வெள்ளை தாடி, மீசை, தலைமுடி என வயதான தோற்றமும் அழகுதான் என தல அஜித் இந்தப் படத்தில் ஸ்டைல் லுக் உடன் ரசிகர்களை AK 61 படம் வெளிவருவதற்கு முன்பே கவர்ந்திருக்கிறார்.

Advertisement Amazon Prime Banner