கடந்த ஒரு வருடமாக நடிகர் அஜித்தின் எந்த படமும் வெளியாகாமல் இருந்தது, அவருடைய ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்தது. இந்த நிலையில், ரசிகர்களை உற்ச்சாக படுத்தும் விதமாக சமீபத்தில் சத்தமே இல்லாமல் விடாமுயற்சி படத்தின் ட்ரைலரை வெளியிட்டார்கள். அப்டேட் இல்லாமல் வெளியானதால் சிலருக்கு தெரியவே இல்லை.
மேலும் நிச்சயமா படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று தற்போது தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில், அஜித்தின் அடுத்த லைன் அப் பற்றி முக்கிய அப்டேட் ஒன்று வந்துள்ளது.
இன்னும் 10 நாள் ஷூட்டிங் விடாமுயற்சி படத்துக்காக ஒதுக்கவிருக்கிறார் அஜித். அதன் பிறகு குட் பேட் அக்லீ படத்தின் விடுபட்ட கட்சிகளின் படப்பிடிப்பு நடைபெறும்.
இதை தொடர்ந்து, கார் ரேஸிங்கில் கவனம் செலுத்தவிருக்கிறார் நடிகர் அஜித். ஆனால், அதற்காக படம் நடிக்காமல் இருக்க போவதில்லை. தன்னை அடுத்ததாக பான் இந்திய நடிகராக upgrade பண்ண திட்டமிட்டுள்ளார் நடிகர் அஜித். அதற்கான வேலைகளையும் இப்போதே ஆரம்பித்துவிட்டார்.
KGF 3 யில் நடிக்கும் அஜித்
நடிகர் அஜித் குட் பேட் அக்லீ படத்தில் நடித்து முடித்த பிறகு, பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகும் KGF 3 படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இதை தொடர்ந்து பிரஷாந்த் நீல் இயக்கத்தில் அடுத்த படம் ஹீரோவாக நடிக்கப்போகிறார். இது ரசிகர்கள் ஹைப்பை ஏற்றியுள்ளது.
அஜித்தை பொறுத்த அளவில், அவருக்கு தமிழ்நாட்டில் பெரிய வரவேற்பு இருந்தாலும், இந்திய அளவில் வரவேற்பு இல்லை என்பது தான் உண்மை. அதை உயர்த்தும் நோக்கத்தில் இந்த முடிவை எடுத்துள்ளார்.
ஒரு வருடம் படம் ரிலீசாகாமல் இருந்தததனால் ரசிகர் அடைந்த ஏமாற்றத்துக்கு ஒரு ஆறுதல் பரிசாக இது நிச்சயம் இருக்கும்.