தல அஜீத் சமீபத்தில் யோகி பாபுவுக்கு கொடுத்த அட்வைஸ் ஒன்றை அவர் வாழ்நாளில் மறக்க முடியாது என ஒரு வீடியோவில் கூறியுள்ளது தல ரசிகர்களை பெருமைப்பட வைத்துள்ளது.
தல அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் மொத்தமாக முடிவுற உள்ளது. ஆனால் அதற்கு வெளிநாடு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
தற்போது வரை படக்குழுவினர் வெளிநாடு படப்பிடிப்பை உறுதி செய்யாமல் தட்டுத்தடுமாறி வருகின்றனர். இதற்கிடையில் தல அஜித் தன்னுடைய அடுத்தடுத்த படங்களை காண இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை உறுதி செய்து வருகிறார்.
தல அஜித்துக்கு ஒருவரை பிடித்து விட்டால் அவர்களை கூப்பிட்டு அவர்களுக்கு என்ன உதவி வேண்டும் என்பதை கேட்பதும், வாழ்க்கையில் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் குறித்து பேசுவார் என பல நடிகர்கள் கூறி கேள்விப்பட்டிருக்கிறோம்.
அந்த வகையில் கடந்த வருடம் யோகிபாபு திருமணத்திற்கு பிறகு தல அஜித்தின் வலிமை படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். அப்போது தல அஜித் யோகிபாபுவுக்கு அழைத்து, சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட குடும்பம் ரொம்ப முக்கியம் என்ற வார்த்தையை கூறினாராம்.
அதைக் கேட்ட பிறகு குடும்பத்திற்கு பிறகுதான் அனைத்தும் என்பதை உணர்ந்தேன் என குறிப்பிட்டுள்ளார். அஜித் திருமணத்திற்கு பிறகு குடும்பத்தினருடன் நேரம் செலவிட தவறியது இல்லை என்பதும் கூடுதல் தகவல்.
