திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

முழு கதையைக் கேட்காமல் நடிக்க சம்மதித்த அஜித்.. கடைசி நேரத்தில் நம்ப வச்சு ஏமாற்றிய வினோத்

எச் வினோத் இயக்கத்தில் அஜித் துணிவு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே மேற்கொண்ட பார்வை, வலிமை திரைப்படங்களை இயக்கிய வினோத் மூன்றாம் முறையாக அஜித்துடன் கூட்டணி அமைத்துள்ளார். இதனாலேயே இந்த திரைப்படத்திற்கு எக்கச்சக்கமாக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

ஆனாலும் வலிமை திரைப்படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் எந்த அளவுக்கு நொந்து போய் காத்திருந்தார்களோ அதுக்கும் மேலாகவே துணிவு திரைப்படத்தின் அப்டேட்டுக்காக காத்திருக்கின்றனர். பல வாரங்களாகவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்த நிலையில் இப்போது தான் பட குழு அதற்கான அறிவிப்பை கொடுத்திருக்கிறது.

Also read: ரிலீசுக்கு முன்பே மாஸ் காட்டும் அஜித்.. இணையத்தை அதிரவிடும் துணிவு படத்தின் புதிய ஸ்டில்கள்

இதனால் குஷி மூடில் இருக்கும் ரசிகர்களுக்கு தற்போது வெளிவந்துள்ள ஒரு செய்தி தான் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. அதாவது அஜித் இந்த படத்தில் நடிக்க எப்படி சம்மதித்தார் என்ற விஷயத்தை வினோத் இப்போது போட்டு உடைத்துள்ளார். வழக்கமாக ஹீரோக்கள் படத்தின் ஸ்கிரிப்ட் முழுவதுமாக கேட்டு அவர்களுக்கு பிடித்த பிறகு தான் நடிக்க சம்மதிப்பார்கள்.

ஆனால் அஜித் துணிவு திரைப்படத்தின் கதையை முழுவதுமாக கேட்கவே இல்லையாம். அதற்கு மாறாக அவர் ஒரே ஒரு காட்சியை மட்டுமே கேட்டுவிட்டு இந்த படத்தில் நடிப்பதற்கு ஓகே சொல்லி இருக்கிறார். அந்தக் காட்சி அந்த அளவுக்கு அவரை இம்ப்ரஸ் செய்திருக்கிறது. அதனாலேயே அவர் உடனடியாக படத்தை ஆரம்பிக்கலாம் என்று கூறியிருக்கிறார்.

Also read: அச்சு அசலாக அஜித் போல இருக்கும் டூப்.. வைரலாகும் புகைப்படம்

இப்படி நம்பிக்கையுடன் சம்மதித்த அஜித்திற்கு இப்போது ஏமாற்றம்தான் கிடைத்துள்ளது. அதாவது அஜித் எந்த காட்சியை பார்த்து பிடித்து போய் நடிக்க சம்மதித்தாரோ அந்த காட்சி படத்தில் இடம்பெறாது என்று வினோத் கூறியிருக்கிறார். மேலும் அவர் துரதிர்ஷ்டவசமாக என்னால் அந்த காட்சியை படத்தில் வைக்க முடியவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

இது அஜித் ரசிகர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. வினோத் மேல் எந்த அளவுக்கு நம்பிக்கை இருந்திருந்தால் அவர் ஒரு காட்சியை மட்டும் கேட்டு ஓகே செய்திருப்பார். ஆனால் வினோத் இப்படி நம்ப வைத்து ஏமாற்றிவிட்டாரே என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். இருப்பினும் துணிவு திரைப்படம் நிச்சயம் வேற லெவலில் மாசாக இருக்கும் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

Also read: இதுவரை பார்க்காத அஜித்தை இனிமேல் பார்ப்பீர்கள்.. துணிவு கேரக்டரை பற்றி க்ளூ கொடுத்த போனி கபூர்

Trending News