புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அஜித்துக்கும், அந்தணனுக்கும் அப்படி என்ன வாய்க்கால் வரப்பு சண்டை.? வலைப்பேச்சு டீம் கொடுத்த பதில்

Ajith : அஜித்துக்கு என்று மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. இந்த சூழலில் வலைப்பேச்சு யூடியூப் சேனலில் அந்தணன் அஜித்தை பற்றி இழிவாக எப்போதுமே பேசி வருவதாக ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அஜித் ரசிகர்கள் அவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டரும் ஒட்டி இருந்தனர்.

சமீபத்திய நேர்காணலில் வலைப்பேச்சு டீம் கலந்து கொண்ட போது அஜித்துக்கும், உங்களுக்கும் அப்படி என்ன முன் பகை என்று கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அந்தணன் எனக்கும் அஜித்துக்கும் ஒன்றும் வாய்க்கால் வரப்பு சண்டை கிடையாது என்று கூறினார்.

வலைப்பேச்சு நிகழ்ச்சியை தொடர்ந்து கவனித்து வந்தால் எல்லோருக்குமே தெரியும். நேற்று ஒரு நடிகரைப் பற்றி பாராட்டி பேசினால், மறுநாள் அதே நடிகரை விமர்சிப்பதும் உண்டு. அது அன்றன்றைக்கு வரும் செய்தியை பொறுத்து தான் நிகழ்வது.

அஜித் மற்றும் அந்தணனுக்கு உள்ள பிரச்சனை

இப்போது சொல்கிறேன் அஜித் மிக நல்லவர், வள்ளல் குணம் கொண்டவர். அஜித்தின் நெருங்கிய நண்பரான பிரதாப்பை நிறைய நாட்களாக சந்திக்க முயற்சி செய்து அஜித்தைப் பற்றி நல்ல விஷயங்களை தெரிந்து கொண்டு பல விஷயங்கள் நான் சொல்லியுள்ளேன்.

அதுதான் இப்போது யூடியூப்பில் உலாவி கொண்டிருக்கிறது. பல நேரங்களில் அஜித் பலருக்கு உதவி செய்த நிலையில் சில காலங்களாக அதிலிருந்து அப்படியே விலகி விட்டார். மேலும் இப்போது சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் அஜித் விமர்சனங்களை கண்டு கொள்ளாத காரணத்தினால் நிறைய நெகட்டிவ் விமர்சனங்கள் அவர் மீது வைக்கப்படுகிறது.

பல பொய்யான தகவல்களையும் பரப்பி வருகிறார்கள். அதெல்லாம் உண்மை இல்லை என்பதை தான் நான் சொன்னேன். மேலும் எல்லோரையும் விட அஜித்தை எனக்கு பிடிக்கும் என்று அந்த பொது மேடையிலேயே அந்தணன் வெளிப்படையாக இந்த விஷயங்களை பகிர்ந்து இருந்தார்.

வள்ளலாக இருந்த அஜித்

Trending News