ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

Lyca Productions: லைக்காவிடம் சிக்கிக்கொண்ட அஜித், கமல்.. அடிமடியிலேயே கை வைத்த கொடுமை

Lyca Productions: பேராசை பெருநஷ்டம் என்று சொல்வார்கள். அது இப்போ லைக்கா ப்ரொடக்ஷன் கம்பெனிக்கு தான் சரியாகிவிட்டது. டாப் ஹீரோக்களின் படங்களை எல்லாம் நாங்கள் தான் தயாரிப்போம் என்று எடுத்து காட்டிக்கொண்டு சுற்றிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் இப்போது அதுவே அவர்களுக்கு ஆப் ஆகிவிட்டது. லைக்கா ப்ரொடக்ஷன் நிறுவனத்தால் தான் ஏற்கனவே அஜித் நடித்துக் கொண்டிருக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்க கிட்டத்தட்ட பல மாதங்கள் தாமதமானது.

அடிமடியிலேயே கை வைத்த கொடுமை

அதன் பிறகு எப்படியோ ஒரு வழியாக இப்போது படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் இந்தியன் 2 படத்தையும் இந்த தயாரிப்பு நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. இந்தியன் 2 படம் ரிலீஸ் தேதி மாசத்துக்கு மாசம் தள்ளி வைக்கப்பட்டு கொண்டே தான் இருக்கிறது.

இது எல்லாத்துக்கும் உண்மையான காரணம் இப்போது வெளியாகியிருக்கிறது. லைக்கா நிறுவனத்தில் ஐடி ரைட் நடந்தது எல்லோருக்கும் தெரியும். இதனால் அந்த நிறுவனத்தின் வங்கி கணக்குகள் சில முடக்கப்பட்டிருப்பதாக கூட வலைப்பேச்சு பிஸ்மி சொல்லி இருக்கிறார்.

இப்போது லைக்கா நிறுவனத்திடம் பழைய மாதிரி பணப்புழக்கம் கிடையாதாம் . சூழ்நிலை தெரிந்திருந்தும் எக்கச்சக்க படங்களை புக் செய்து கொண்டு இருக்கிறார்கள். இந்தியன் 2 படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டும் படமாக்கப்பட வேண்டும். அதற்கு கூட பட்ஜெட் இன்னும் ஒதுக்கப்படவில்லை என தெரிகிறது.

அதே மாதிரி விடாமுயற்சி படத்தை எடுத்து முடிப்பதற்கும் திணறிக் கொண்டிருக்கிறார்கள். வேட்டையன் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அமிதாப்பச்சன் தங்கி இருந்த ஹோட்டலுக்கு கூட லைக்காவால் வாடகை கொடுக்க முடியவில்லை.

ஒரு கட்டத்தில் டென்ஷன் ஆகி அமிதாப்பச்சனே வாடகை பணத்தை கொடுத்து விட்டு கிளம்பி விட்டாராம். ஒரு பாடல் காட்சியை படமாக்க முடியாமல் இந்தியன் 2 ரிலீஸ் தேதி தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படி இருக்கும் பட்சத்தில் விடாமுயற்சி படத்தை எப்படி எடுத்து முடிப்பார்கள் என வலைப்பேச்சு யூடியூப் சேனலில் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். ஏற்கனவே அஜித் பணம் ரிலீஸ் ஆகாமல் அவருடைய ரசிகர்கள் பயங்கர கடுப்பில் இருக்கிறார்கள். இது போன்ற சமயத்தில் இப்படி ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

Trending News