புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அஜித், மஞ்சு வாரியர் போட்ட பெரிய பிளான்.. தடாலடியாய் ஊத்தி மூடிய ஏகே-62 படக்குழு

மலையாளத்தில் டாப் ஹீரோயினாக கலக்கிக் கொண்டிருக்கும் மஞ்சு வாரியர் சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது அஜித்துடன் ஏற்பட்ட நட்பு காரணமாக அவரோடு பைக்கில் உலகம் சுற்றும் சவாலில் முன்வந்து தன்னை இணைத்துக் கொண்டார்.

இவர்கள் இருவரும் பைக்கில் வேர்ல்ட் டூர் செல்வதற்கு பெரிய பிளான் போட்டு வைத்திருந்தனர். ஆனால் அதையெல்லாம் தடாலடியாய் ஏகே 62 படக்குழு ஊத்தி மூடி விட்டது. நடிப்பை தாண்டி அஜித்துக்கு கார், பைக் ரேசிங் செய்வதில் அதிக ஆர்வம் உண்டு. இதனால் இவர் ஒவ்வொரு முறையும் படத்தை முடித்துவிட்டு ஜாலி பண்ணுவதற்காக பைக்கை எடுத்துக் கொண்ட கிளம்பி விடுவார்.

Also Read: குழந்தைகளை நெஞ்சோடு அணைத்தபடி வந்த நயன்-விக்கி.. ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் புகைப்படம்

இவ்வாறு இருக்கும் போது துணிவு படத்தை முடித்த கையோடு அஜித் மற்றும் மஞ்சு வாரியர் இருவரும் பைக்கில் உலகம் சுற்றும் சவாலை மேற்கொள்ளலாம் என நினைத்தார்கள். அஜித் நடிக்கும் ஏகே 62 படப்பிடிப்பு முன்கூட்டியே துவங்கி இருக்க வேண்டியது. ஆனால் அந்தப் படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் விலகியதால், திடீரென்று புது இயக்குனரை தேர்வு செய்ய வேண்டியதாக இருந்தது.

இந்த வேலைகளை மும்முறமாக பார்த்துக் கொண்டிருந்த படக்குழுவிற்கு அஜித்தின் வேர்ல்ட் டூர் பிளான் தெரிந்தது. இவர் ஏற்கனவே வடமாநிலம்  எல்லாம் ஒரு டூர் அடித்து விட்டார். இப்பொழுது அவர் நெடுநாள் விரும்பிய வேர்ல்ட் டூர் போக ஆயத்தமாகி வருகிறார். அவர் ஜூலையில் செல்ல திட்டமிட்டு இருந்தார். 

Also Read: இயக்குனருக்கு கதை சொல்லும் அஜித்.. அதுவும் ஆங்கில பட சிடி உடன் சுற்றி வருகிறாராம்.!

ஆனால் இப்பொழுது ஏகே 62  இழுத்து கொண்டே போவதால் இவர் பரஸ்பர பயணத்தை ஒத்தி வைத்து விட்டார். இதற்கு முந்தைய படங்களில் அஜித்தை சுற்ற வைத்துவிட்டு, படக்குழு கால் கடுக்க காத்திருக்கும். இந்த முறை முன்கூட்டியே சுதாரித்துக் கொண்ட ஏகே 62 படக்குழு அஜித்தை சாமர்த்தியமாக இறுக்கி பிடித்து விட்டனர். 

ஏகே 62 படம் ஆரம்பித்து முடிய லேட்டாகும் என்பது தெளிவாக தெரிகிறது. அதனால் வேல்டு டூர் இந்த வருடம் இல்லை என்று அஜித் முடிவு எடுத்துவிட்டார். மஞ்சு வாரியர் அஜித்துடன் டூர் செல்வதாக ஒரு தகவல் இருக்கிறது. அவரும் பிஸியாக இருப்பதால் இதற்கு 2024 ஆம் ஆண்டு தான் நேரம் கிடைக்கும்  என்பது தெரிந்துவிட்டது.

Also Read: மருத்துவமனையில் அஜித்தின் தம்பி.. சூர்யா 42 ஷூட்டிங்கை நிறுத்திய சிறுத்தை சிவா

Trending News