அஜித் மற்றும் ஷாலினி இருவரும் நட்சத்திர தம்பதிகளாக வளம் வந்து கொண்டிருக்கிறார்கள். அமர்க்களம் படத்தில் நடித்ததன் மூலம் இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சில வருடங்களுக்கு முன்பு இவர்களின் புகைப்படங்களை இணையத்தில் பார்ப்பது மிகவும் அரிதான ஒன்றாக இருந்தது.
ஏனென்றால் அஜித், ஷாலினி இருவருமே சமூக வலைத்தளங்களில் இடம் பெறவில்லை. அதுமட்டுமின்றி அஜித்துக்கு தன்னுடைய சொந்த விஷயங்களை வெளிப்படையாக காட்டுவதில் விருப்பமில்லை. ஆகையால் அஜித், ஷாலினி ஏதாவது நிகழ்ச்சிக்கு செல்லும்போது எடுக்கப்படும் புகைப்படங்கள் மட்டும்தான் வெளியாகி வந்தது.
Also Read : அஜித்தை பார்த்து ஓரம் கட்டிய சிவகார்த்திகேயன்.. முழு வீச்சில் செக் வைக்கும் மனைவி
ஆனால் கடந்த சில மாதங்களாக அஜித், ஷாலினி குடும்ப புகைப்படங்கள் அதிகமாக வெளியாகி வருகிறது. அதிலும் குறிப்பாக இவர்களது ரொமான்டிக் புகைப்படங்கள் தான் இணையத்தை மையம் கொண்டு உள்ளது. இப்போது அஜித், ஷாலினி இருவரும் துபாயில் நடுக்கடலில் படகில் செல்லும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. மேலும் அஜித் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் எப்போது ஏகே 62 படத்திற்கான அறிவிப்பு வரும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். லைக்கா, அஜித், மகிழ்திருமேனி முதல் முறையாக கூட்டணி போடும் நிலையில் அறிவிப்பு தாமதமாகி வருகிறது.
Also Read : அஜித், விஜய் தியேட்டர்களில் தாலாட்டி தூங்க வைத்த 6 படங்கள்.. படு தோல்வி சந்தித்த சுறா
![](https://www.cinemapettai.com/wp-content/uploads/2023/03/ajith-shalini.jpg)
விஜய் லியோ படத்திற்கு போட்டியாக ஏகே 62 வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர். ஆனால் இன்னும் அறிவிப்பு மற்றும் படப்பிடிப்பு தொடங்காததால் அஜித் ரசிகர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர். ஆனாலும் இப்போது அஜித், ஷாலினி புகைப்படம் வெளியாகி ரசிகர்களை ஓரளவு கூல் செய்துள்ளது.
![](https://www.cinemapettai.com/wp-content/uploads/2023/03/ajith-shalini-1.jpg)
Also Read : விஜய், அஜித்தை வைத்து ரஜினியோட அந்தப் படத்திற்கு அடி போடும் லோகேஷ்.. மெகா பிளான் ஒர்க் அவுட் ஆகுமா?