தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தல அஜித் அடுத்ததாக வலிமை படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து மீண்டும் மூன்றாவது முறையாக வினோத் உடன் குறுகிய கால தயாரிப்பில் ஒரு படம் செய்ய உள்ளார்.
தல அஜித், சினிமா வாழ்க்கையையும் தாண்டி குடும்ப வாழ்க்கையில் எப்போதுமே அதிக அக்கறை கொண்டவர். தன்னைச் சார்ந்தவர்களையும் சரி, தன்னுடன் வாழ்பவர்களையும் சரி, எப்போதும் எந்த ஒரு விஷயத்திற்கும் நோகடிக்க மாட்டார் என அவரது வட்டாரங்களிலிருந்து கூறியுள்ளனர்.
தல அஜித் நடிகை ஷாலினி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். ஷாலினி சிறு வயதிலிருந்தே சினிமாவில் நடித்து வருகிறார். அதேபோல் அவரது தங்கை ஷாமிலியும் சிறுவயதிலிருந்து சினிமாவில் நடித்து வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் இருவரும் நடித்துள்ளனர். அதேபோல் ஷாலினியின் அண்ணனும் ஒரு நடிகர்தான். சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பிய திரௌபதி படத்தின் ஹீரோதான் அவர். அவரது பெயர் ரிச்சர்ட்.
இப்படி குடும்பமே சினிமா சம்பந்தப்பட்டவர்களாக இருந்தாலும் இதுவரை தல அஜித்துடன் ஷாலினியின் தங்கை ஷாமிலி இணைந்து நடித்ததில்லை என பலரும் கூறினர். ஆனால் 2000ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திலேயே இருவரும் இணைந்து நடித்துள்ளனர் என்பது பலருக்கும் தெரியாது.

அந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வரும் தபுவின் தங்கையாக நடித்திருந்தார் ஷாமிலி. அந்த புகைப்படம் தற்போது தான் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் அஜித் மற்றும் ஷாலினி இருவரும் இணைந்து நடித்த ஒரே படம் இதுதான்.
