Ajith : அஜித் இப்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் விடாமுயற்சி வருகின்ற பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வர இருக்கிறது.
இந்த சூழலில் இன்னும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவதாக கூறப்பட்டது. அதிலும் விடாமுயற்சியின் முக்கால்வாசி படபிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்றது.
மாஸ் லுக்கில் அஜித்
இதனாலேயே இந்த வருடத்தில் அதிகம் சுற்றுலாவுக்கு சென்ற இடமாக அந்த இடம் மாறியது. இந்நிலையில் இன்னும் படத்தின் பாடல் காட்சிகள் மீதம் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அதற்கான படப்பிடிப்பும் நடந்து வருகிறது.
விடாமுயற்சி படப்பிடிப்பில் அஜித் மற்றும் திரிஷா
மேலும் அஜித் இப்போது நடித்து வரும் இரண்டு படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார். ஏற்கனவே கிரீடம், மங்காத்தா ஆகிய படங்களில் அஜித் மற்றும் திரிஷா இணைந்து நடித்திருந்தனர்.
வைரலாகும் அஜித், திரிஷா புகைப்படம்
இவர்களது கெமிஸ்ட்ரி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் விடாமுயற்சி படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது. இந்த சூழலில் அஜித் மாஸ் லுக்கில் கோட் சேட்டில் இருக்கும் புகைப்படம் வெளியாகி இருக்கிறது.
அஜித்தின் அருகில் திரிஷாவும் புடவையில் உள்ளார். இந்தப் புகைப்படம் தான் இணையத்தில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது. மேலும் விடாமுயற்சி கண்டிப்பாக பொங்கலுக்கு வெளியாகும் என்ற நம்பிக்கை இப்போது ரசிகர்களுக்கு வந்திருக்கிறது