வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

விடாமுயற்சியில் அஜித், திரிஷாவின் கேரக்டர் பெயர்.. சர்ப்ரைஸ் தரப்போகும் 3 எழுத்து

Ajith-Trisha-Vidaa Muyarchi: அஜித்தின் விடாமுயற்சி சூட்டிங் விடாமல் நடைபெற்று வருகிறது. இதற்காக பட குழு வெளிநாட்டிலேயே டென்ட் போட்டு தங்கி உள்ளனர். எப்படியாவது படப்பிடிப்பை விரைவில் முடித்து விட வேண்டும் என அஜித்தும் தன் பங்குக்கு கண்டிஷன் போட்டு இருக்கிறார்.

அதாவது மாதக்கணக்கில் இழுத்து வரும் ஷூட்டிங்கை பிப்ரவரி மாதத்திற்குள் முடித்து விட வேண்டும் என்பதுதான் அஜித்தின் எண்ணம். ஏனென்றால் இப்போது குளிர், மணல் புயல் என இயற்கை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கிறதாம். இதனால் படப்பிடிப்பு தாமதமாகும் சூழல் இருக்கிறது.

Also read: அஜித், விஜய் ரெண்டு பேரும் வேண்டாம், வெறுத்த இயக்குனர்.. மத்தளம் போல் இரு பக்கமும் விழும் அடி

ஆனாலும் அஜித் கொடுத்த தேதிக்குள் படத்தை முடிக்க இயக்குனரும் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில் விடாமுயற்சி படத்தில் அஜித் திரிஷாவின் கதாபாத்திர பெயர்கள் என்ன என்பது தெரிய வந்துள்ளது. அதன்படி அஜித்தின் பெயர் அர்ஜுன் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

ஏனென்றால் ஏற்கனவே இப்படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் இருக்கிறார். அப்படி பார்த்தால் இரண்டு அர்ஜுனா? என்று ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேபோல் திரிஷாவின் பெயர் கயல். ஏற்கனவே லியோ படத்தில் சத்யா என்ற பெயர் வசீகரிக்கும் படி இருந்தது.

Also read: அஜித் எதிரியாக இருந்தாலும் அவரையே பாலோ பண்ணும் வடிவேலு.. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்குது

அதைத்தொடர்ந்து மீண்டும் மூன்று எழுத்து பெயர் திரிஷாவுக்கு கிடைத்திருக்கிறது. அந்த வகையில் லியோ சத்யா போலவே விடாமுயற்சி கயலும் ரசிகர்களை கவர்வார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த அளவுக்கு அவருடைய காட்சிகள் படத்தில் அழகாக இருக்குமாம்.

Trending News