திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

இனி ஒரு உயிர் போகக்கூடாது, ஆட்டமெல்லாம் வாரிசு துணிவோடு முடிஞ்சு.. அஜித், விஜய் எடுத்த அதிரடி முடிவு

பெரும் எதிர்பார்ப்பை கடந்த சில மாதங்களாகவே ஏற்படுத்திய தல தளபதி இருவரின் துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்கள் கடந்த 11 ஆம் தேதி ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இருப்பினும் துணிவு படம் முதல் நாளில் பலரையும் ஆச்சரியப்படுத்திய நிலையில் வாரிசு படத்திற்கு சில நெகட்டிவ் கமெண்டுகள் குவிந்தது. இருப்பினும் வாரிசு தான் தற்போது அனைத்து தரப்பு மக்களின் கவர்ந்து வசூலில் முன்னிலை வகித்து வருகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான இந்த இரண்டு படங்களையும் ரசிகர்கள் எந்தவித அலப்பறையும் செய்யாமல் சந்தோசமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திரையரங்கிற்கு வரலாம். ஆனால் இந்தப் படத்தை வைத்து சோசியல் மீடியாவில் சண்டை சச்சரவுகளும், சில விபத்துகளும் ஏற்படுவதால் தற்போது அஜித், விஜய் இருவரும் சேர்ந்து அதிரடி முடிவை எடுத்து இருக்கின்றனர். இதனால் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் விநியோகஸ்தர்களுக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் அஜித், விஜய் இருவரும் செக் வைத்திருக்கின்றனர்.

Also Read: வாரிசு, துணிவு படங்களை ரத்து செய்த தியேட்டர்கள்.. அஜித்,விஜய்யை யோசிக்க வைத்த சம்பவம்

தற்சமயம் துணிவு, வாரிசு இந்த இரு படங்களால் மொத்த தமிழ்நாடும் அல்லோலப்பட்டு வருகிறது. இந்த இரு படத்தாலும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் ஏகப்பட்ட பிரச்சனைகள் கிளம்புகிறது. இதனாலே அஜித், விஜய் இருவரும் சமூக நல்லிணக்கத்துடன் அதிரடி முடிவை எடுத்து இருக்கின்றனர். இவர்கள் படங்கள் ரிலீஸ் ஆகும் சமயத்தில் பொதுமக்களுக்கு தொந்தரவு விளைவிக்கும் வகையில் ரசிகர்கள் நடந்து கொள்கின்றனர்.

பேனர்களை வைத்து இடையூறு செய்வதோடு தியேட்டர்களையும் சூறையாடுகின்றனர். சமீபத்தில் துணிவு படத்தின் ரிலீஸ் நேரத்தில் ஒரு ரசிகர் உயிரையே விட்டுவிட்டார். துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோவை பார்க்க வேண்டும் என பல இளைஞர்கள் ரோகினி தியேட்டர் முன்பு குவிந்தனர். அப்போது சந்தோஷத்தில் பரத் என்ற 19 வயது வாலிபன் லாரியின் மீது ஏறி நடனமாடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய போது தவறி விழுந்த பரிதாபமாக உயிரிழந்தார். இது அஜித் ரசிகர்களை மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழகத்தையும் உலுக்கியது.

Also Read: மட்டமான வேலை பார்த்த AK Mafia ரசிகர்.. தமிழை போல் தெலுங்கிலும் வாரிசுக்கு எதிராக நடக்கும் சதி

அதனால் இனிமேல் சிறப்பு காட்சிகளை நீக்க இவர்கள் இருவரும் முடிவு எடுத்ததாக தெரிகிறது. எப்பொழுதும் போல படங்கள் ரிலீஸ் ஆகுமாம். துணிவு மற்றும் வாரிசு படங்களின் மூலம் எட்டு வருடங்களுக்குப் பிறகு தல தளபதி இருவரும் மோதிக்கொண்டதால் அவர்களது ரசிகர்களிடையே கூச்சமும் குழப்பமும் ஏற்பட்டிருக்கிறது.

இனி ஒரு உயிர் கூட போகக்கூடாது. ஆட்டத்தை எல்லாம் வாரிசு மற்றும் துணிவோடு நிறுத்திக் கொள்ளுங்கள் என்று அஜித் விஜய் இருவரின் நடிப்பில் இனி வெளியாகும் படங்களுக்கு சிறப்புக்காட்சி கிடையாது. இவர்களுடைய இந்த முடிவால் விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர். ஏனென்றால் சிறப்பு காட்சிகளை வைத்து தாறுமாறாக டிக்கெட் விலைகளை உயர்த்தி வசூலை அள்ளிக் கொண்டிருக்கும் இவர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.

Also Read: நெகட்டிவ் விமர்சனங்களை அடித்து நொறுக்கிய வாரிசு.. 3 நாள் பாக்ஸ் ஆபிஸை மிரட்டிய வசூல்

Trending News