Kalaignar 100: கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இதற்காக பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அதேபோல் போலீஸ் பாதுகாப்பும் கடுமையாக இருந்தது.
மேலும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இணைந்து நடத்திய அந்த விழாவை முதல்வர் ஸ்டாலின் உட்பட ரஜினி, கமல் என பல பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய், அஜித் மட்டும் எஸ்கேப் ஆகிவிட்டனர்.
Also read: கலைஞர் நூற்றாண்டு விழாவில் சங்கமிக்கும் 5 மெகா ஸ்டர்கள்.. வீம்பு பண்ணும் ஹீரோ
இத்தனைக்கும் அவர்கள் சென்னையில்தான் இருந்திருக்கின்றனர். ஆனாலும் இந்த நிகழ்வில் அவர்கள் கலந்து கொள்ளவில்லை. இது எதிர்பார்த்தது தான் என்றாலும் இப்போது மீடியாவில் இது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இதற்கு முன்பு பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா என்ற நிகழ்வு கலைஞர் முன்னிலையில் நடத்தப்பட்டது. அப்போது ஒட்டுமொத்த திரையுலகமும் திரண்டு வந்திருந்தது. அதில் விஜய், அஜித் ஆகியோரும் கலந்து கொண்டனர். ஆனால் நேற்று நடைபெற்ற நிகழ்வில் பெரும்பாலான நட்சத்திரங்கள் மிஸ்ஸிங்.
பல பிரபலங்கள் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வெளிநாடு சென்ற நிலையில் இன்னும் ஊர் திரும்பவில்லை. ஆனால் அஜித் வெளிநாட்டிலிருந்து சென்னை வந்தும் கூட இந்த விழாவை புறக்கணித்திருக்கிறார். ஏற்கனவே கேப்டன் மறைவிற்கு இவர் வராதது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
Also read: விடாமுயற்சியில் அஜித், திரிஷாவின் கேரக்டர் பெயர்.. சர்ப்ரைஸ் தரப்போகும் 3 எழுத்து
அதனாலேயே இந்த நிகழ்வுக்கு சென்றால் தேவையில்லாத பிரச்சினை வரும் என்று அவர் தவிர்த்து இருக்கலாம். ஆனால் விஜய் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் வராததற்கு பின்னணியில் அரசியல் ரீதியான காரணங்கள் இருக்கிறதா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.