ரஜினியை பின்பற்றும் அஜித், விஜய்.. எந்த தைரியத்துல இப்படி எல்லாம் செய்றாங்க

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பல நடிகர்கள் பின்பற்றி பெரிய உயரத்தை அடைந்துள்ளனர். ஆனால் இப்போது ரஜினியை பார்த்து நாமும் செய்வோம் என விஜய் மற்றும் அஜித் ஒரு தவறான முடிவை எடுத்துள்ளதாக ஒரு செய்தி இணையத்தில் பரவி கொண்டிருக்கிறது.

அதாவது சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளிவந்த படம் பாபா. இது ரஜினியின் சினிமா வாழ்க்கையை திருப்பி போட்ட படம் என்று சொல்லலாம். இந்த படத்தை தற்போது ரீ எடிட் செய்து டிசம்பர் 10ஆம் தேதி வெளியிடுகின்றனர். சமீபத்தில் கூட இப்படத்தின் டப்பிங்கை ரஜினி பேசி முடித்தார்.

Also Read : ரஜினியை போல் விஜய்யை காலி செய்வதற்கு விசுவாசிகள் செய்த வேலை.. தளபதி சூதானமா இருந்துக்கோங்க இல்லனா ஆபத்து

இந்நிலையில் பாபா படத்திற்கு இப்போதே திரையரங்குகள் எல்லாம் ஹவுஸ்புல் ஆகிவிட்டது. இதே போல் தற்போது அஜித் மற்றும் விஜய் படங்கள் ரீ எடிட் செய்து விரைவில் வெளியாகப் போகிறதாம். அந்த வகையில் 2007 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான ஆழ்வார் படத்தை ரீ எடிட் செய்யப் போகிறார்கள்.

மேலும் விஜய்க்கு மிகப்பெரிய தோல்வியை கொடுத்த சுறா படத்தை ரீ எடிட் செய்கிறார்களாம். இது அவர்களது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் ஹிட் படத்தை எடுத்தால் கூட ரசிகர்கள் பார்க்க வருவார்கள். ஆனால் தோல்வியுற்ற படத்தை மீண்டும் எடுத்தால் அதில் எப்படி லாபத்தை பார்க்க முடியும்.

Also Read : எம்ஜிஆரின் திடீர் மரணம், பரிதவித்த ஜெயலலிதா.. 35 வருடங்களுக்கு முன் ரஜினி செய்த உதவி

மேலும் இந்த படத்தை ரசிகர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என பலரும் கூறி வருகிறார்கள். இப்படி செய்தால் ஒருவகையில் அஜித், விஜய் மார்க்கெட் இறங்கவும் வாய்ப்புள்ளது என சிலர் கருதுகிறார்கள். மேலும் விஜய், அஜித் இருவருக்குமே பெருத்த அடி கொடுத்த இந்த படங்களை செய்ய எந்த தைரியத்தில் இவர்கள் ஒத்துக் கொண்டார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஆனால் இதற்கான வேலை தற்போது மும்மரமாக நடந்து வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஒருவகையில் இந்தப் படங்களால் இழந்த நஷ்டத்தை இப்போது வெளியிட்டால் தங்களது மார்க்கெட்டால் ஈடு கட்டிவிடலாம் என்ற எண்ணத்தில் இவ்வாறு செய்கிறார்களா என்பது தெரியவில்லை.

Also Read : விளம்பரம் தேவையில்லை என சொன்னது எல்லாம் பொய்யா.? வினோத்தை வைத்து துணிவு அஜித் ஆடும் ஆட்டம்