செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ரஜினி, கமல் தான் இத பண்ணுவாங்களா.? பேராசையில் அஜித்தை தூதுவிடப் போகும் விஜய்

Kalaignar 100: நடிகர் அஜித் குமார் தற்போது விடாமுயற்சி பட சூட்டிங்கில் படு பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். படப்பிடிப்பு ஆரம்பித்தது சந்தோஷம் என்றாலும், இதுவரை எந்த அப்டேட்டுகளுமே வெளியாகவில்லை என்பது அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றமாகத்தான் இருக்கிறது. விடாமுயற்சி வேலைகள் ஆரம்பித்த பொழுதே அஜித் அடுத்து ஆதிக்ரவிச்சந்திரன் மற்றும் விக்னேஷ் சிவனுடன் இணைந்து படம் பண்ணுகிறார் என்ற செய்தியும் வெளியாகி இருக்கிறது.

அஜித் பொதுவெளியில் பேசுவது என்பது ரொம்பவும் அரிதான விஷயமாக ஆகிவிட்டது. சமீப காலமாக அவருடைய மனைவி ஷாலினி சமூக வலைத்தளங்களில் பகிரும் புகைப்படங்கள் தான் அவருடைய ரசிகர்களுக்கு ஆறுதலாக இருப்பது. அஜித் எப்போது பேசுவார் என ஏங்கிக் கொண்டிருந்த அவருடைய ரசிகர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் இரண்டு பெரிய சம்பவங்கள் காத்திருக்கிறது.

Also Read:சிம்புவின் பரம எதிரியை மாப்பிள்ளையாக்கும் பிரபு.. தடபுடலாக நடக்க போகும் 2ம் திருமணம்

வரும் டிசம்பர் 24ஆம் தேதி ஒட்டுமொத்த தமிழ் திரை உலகினரால் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு கலைஞர் 100 என்னும் விழா கொண்டாடப்படுகிறது. சினிமாவில் கருணாநிதியின் பங்கை பற்றி எடுத்துரைக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி அமைய இருக்கிறது. இதில் நடிகர்கள் அத்தனை பேரும் கலந்து கொள்ள வேண்டும் என ஆர் கே செல்வமணி அழைப்பு விடுத்திருக்கிறார்.

ஒரே மேடையில் சந்திக்கும் அஜித் மற்றும் விஜய்

பல வருடங்கள் கழித்து திரை உலகினரால் இப்படி ஒரு விழா கொண்டாடப்பட இருக்கிறது. கமல் மற்றும் ரஜினி இதில் கலந்து கொள்வது ஓரளவுக்கு உறுதியாகிவிட்டது. விஜய் மற்றும் அஜித்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாக ஆர்கே செல்வமணி சொல்லியிருக்கிறார். இதனால் நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் இந்த நிகழ்வில் ஒரே மேடையில் சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து டிசம்பர் மாதம் நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடைபெற இருக்கிறது. மாப்பிள்ளை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தான். பிரபு வீட்டு திருமணத்திற்காக ஒட்டுமொத்த திரையுலகமும் ஒன்று கூடிவிடும். அதிலும் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் தீவிர ரசிகர் என்பதால் கண்டிப்பாக அஜித் இந்த திருமணத்திற்கு வருவார். இங்கேயும் அஜித் மற்றும் விஜய் சந்திப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

திரையுலக ஜாம்பவான்கள் ஆக இருக்கும் கமல் மற்றும் ரஜினி 40 வருடத்திற்கும் மேலாக நட்புடன் பழகி வருகிறார்கள். கிடைக்கும் மேடைகளில் எல்லாம் தங்களுடைய நட்பை அவர்கள் கொண்டாட தவறியதே இல்லை. அவர்களுடைய வழியில் அஜித் மற்றும் விஜய் இனி பயணிக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அதற்கு இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் உதவியாக இருக்கும்.

Also Read:ஆதிக் மடியில் விழுந்த ஏகே 63 பட வாய்ப்பு.. அஜித் நண்பர் கொடுத்த சர்டிபிகேட்

Trending News