திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

இந்த விஷயத்தில் அஜித்தும், விவேக்கும் ஒரே மாதிரிதான்.. ஊரே சிரிப்பா சிரிச்ச சம்பவம்

Ajith and Vivek: அஜித்தை பொருத்தவரை நடிப்பது மட்டுமே நம்முடைய கடமை என்பதற்கு ஏற்ப படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். இதைத்தவிர தேவையில்லாத பேட்டிகள், பொது நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் போன்ற எந்த விஷயங்களிலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியே போகிறார். ஆனாலும் ரசிகர்கள் இவரை தூக்கிக் கொண்டாடும் அளவிற்கு ஒய்யாரத்தில் வைத்திருக்கிறார்கள்.

அதற்கு காரணம் வெறும் நடிப்பு மட்டுமல்லாமல் இவருடைய நிஜமான கேரக்டரும் மக்களுக்கு பிடித்ததினால் மட்டுமே. அதாவது மற்றவர்களுக்கு எப்படி மரியாதை கொடுக்க வேண்டும். சக கலைஞர்களையும், ரசிகர்களையும் கஷ்டப்படுத்தாத ஒரு ஜென்டில்மேன் என்று பெயரை வாங்கி இருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் இவருடன் பணியாற்றுபவர்கள் யாராவது கஷ்டத்தில் இருக்கிறார் என்று தெரிந்தால் உடனே உதவி செய்யக்கூடிய முதல் நபராக இவர் தான் போய் நிற்கிறார். அப்படித்தான் பலருக்கும் இவர் உதவிகளை செய்து வருகிறார். இதில் குறிப்பிட்டு சொல்லும் படியான ஒரு விஷயம் என்னவென்றால் அமர்க்களம் படப்பிடிப்பின் போது இயக்குனர் சரண் பைக்கில் வருவதை பார்த்து ஏதாவது இவருக்கு பண்ண வேண்டும் என்று நினைத்திருக்கிறார்.

Also read: விஜய் வேண்டாம், அஜித் வந்தா தான் ஹைப் இருக்கும்.. மறக்க முடியாத தரமான சம்பவம்

அதற்காக உடனே இவருக்கு தோன்றிய விஷயம்தான் கார். இயக்குனர் சரணுக்கு கார் வாங்கி கொடுத்திருக்கிறார். இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சரண் சைலண்டாகவே இருந்திருக்கிறார். அதன்பின் என்னவென்று பார்த்தால் அவருக்கு கார் ஓட்டத் தெரியாததால் தான் பைக்கில் வந்திருக்கிறாராம். அது மட்டுமில்லாமல் ஏற்கனவே சரண் வீட்டில் கார் இருக்கிறதாம்.இதை கேள்விப்பட்டதும் படப்பிடிப்பில் இருப்பவர்கள் அஜித்தை கிண்டலாக பார்த்து சிரித்து இருக்கிறார்கள்.

இவரைப் போல தான் நடிகர் விவேக்கும். இவருடன் சேர்ந்து நடித்த சின்ன ஆர்டிஸ்ட் ஒருவர் சைக்கிளில் கஷ்டப்பட்டு படப்பிடிப்புக்கு வருவதைப் பார்த்து அவருக்கு இவரால் முடிந்தவரை ஒரு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்திருக்கிறார். அதற்காக சர்ப்ரைஸ் ஆக அவருக்கு டிவிஎஸ் 50 பைக்கை வாங்கி கொடுத்து இருக்கிறார். அப்பொழுது பைக் சாவியை அந்த நபரிடம் கொடுக்கும் பொழுது எந்தவித ரியாக்ஷன் கொடுக்காமல் அமைதியாக இருந்திருக்கிறார்.

இதனை பார்த்த விவேக் உங்களுக்கு இதில் எந்தவித மகிழ்ச்சியும் இல்லையா என்று கேட்டிருக்கிறார். அப்பொழுது எனக்கு ரொம்பவே ஹேப்பியாக இருக்கிறது. ஆனால் பைக் ஓட்டத் தெரியாது என்று சொல்லி இருக்கிறார். உடனே சூட்டிங் ஸ்பாட்டில் இருந்த அனைவரும் விவேக்கை பார்த்து நக்கலாக சிரித்து இருக்கிறார்கள். இதில் மற்றவர்கள் என்னதான் சிரித்து அசிங்கப்படுத்தினாலும் அஜித் மற்றும் விவேக் மற்றவர்களுக்கு உதவி செய்யும் எண்ணம் பெருசு தான்.

Also read: 4 ஜாம்பவான்களை இழந்து ரெடியான இந்தியன் 2.. ஒரிஜினல் குணசேகரன் இல்லாததால் செத்துப்போன டிஆர்பி

Trending News