வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

அஜித் கோபப்பட்டு திட்டிய ஒரே நடிகை நான்தான்.. 41 வயதில் உண்மையைச் சொன்ன நடிகை

அஜித் எப்போதுமே தன்மையாக நடந்து கொள்பவர் என பலரும் கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படிப்பட்ட அஜித் பிரபல நடிகையை படப்பிடிப்பு தளத்தில் திட்டியதாக அவரே சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளது தல ரசிகர்களை சோகமடைய வைத்துள்ளது.

தல அஜித் நடிப்பில் 1999 ஆம் ஆண்டு உருவான திரைப்படம் உன்னை தேடி. இந்த படத்தை சுந்தர் சி இயக்கியிருந்தார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை மாளவிகா நடித்திருந்தார்.

அன்றைய காலகட்டங்களில் சுந்தர் சி படங்கள் சூப்பர் ஹிட்டடித்து வந்த நிலையில் இந்த படம் சுமாரான வெற்றியைப் பெற்றது. இந்த படத்தின் படப்பிடிப்பின்போது தல அஜித் மாளவிகாவை திட்டி விட்டாராம்.

மாளவிகா மற்றும் அஜித் இருவரும் நடனமாடும் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அப்போது மாளவிகாவுக்கு சரியாக நடனம் ஆட வரவில்லை. இந்நிலையில் மாஸ்டர் சொல்லிக் கொடுத்தபடி ஆடாமல் மாளவிகா இஷ்டத்திற்கு ஆடியதால் அஜித் கடுப்பாகி விட்டாராம்.

ஒழுங்காக மாஸ்டர் சொல்வதை கவனித்துப் பார்த்து தெளிவாக ஆடுங்கள் என மாளவிகாவை திட்டி விட்டதாக சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் மாளவிகா இதைப்பற்றி தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு அதே வருடத்தில் வெளியான ஆனந்த பூங்காற்றே திரைப்படத்திலும் மீண்டும் அஜித் மற்றும் மாளவிகா இருவரும் இணைந்து நடித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ajith-malavika-cinemapettai
ajith-malavika-cinemapettai

Trending News